PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
வேற்றுமைத்தொகை
 
திருக்குறள் படித்தாள். இத்தொடர் திருக்குறளைப் படித்தாள் என விரிந்து நின்று பொருள் தருகிறது.
 
இரு சொற்களுக்கும் இடையில் ‘ஐ’ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது.
 
இவ்வாறு இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபு மறைந்து வந்து பொருள் தந்தால் அதனை வேற்றுமைத்தொகை என்பர்.
 
1. திருவாசகம் படித்தான் - (ஐ) இரண்டாம் வேற்றுமைத்தொகை
 
2. தலைவணங்கு - (ஆல்) மூன்றாம் வேற்றுமைத்தொகை
 
3. சிதம்பரம் சென்றான் - (கு) நான்காம் வேற்றுமைத்தொகை
 
4. மலைவீழ் அருவி - (இன்) ஐந்தாம் வேற்றுமைத்தொகை
 
5. கம்பர் பாடல் - (அது) ஆறாம் வேற்றுமைத்தொகை
 
6. மலைக்குகை - (கண்) ஏழாம் வேற்றுமைத்தொகை
 
உருபும் பயனும் உடன்தொக்க தொகை
 
பணப்பை
 
இது பணத்தைக் கொண்ட பை என விரிந்து பொருள் தருகிறது.
 
பணம், பை என்னும் இரு சொற்களுக்கு இடையில் ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபும் ‘கொண்ட’ என்னும் சொல்லும் (உருபின் பயன்) மறைந்து வந்துள்ளன.
 
இவ்வாறு, ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் சொல்லும் (பயன்) மறைந்து வருவது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை எனப்படும்.
 
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
 
(எ.கா.) பால் குடம் - (பாலைக் கொண்ட குடம்)
 
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
 
(எ.கா.) பொற்சிலை - (பொன்னால் ஆகிய சிலை)
 
நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
 
(எ.கா.) மாட்டுக் கொட்டகை – (மாட்டுக்குக் கட்டப்பட்ட கொட்டகை).