PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
வினைத்தொகை
 
ஆடுகொடி, வளர்தமிழ்
 
இத்தொடர்களில் ஆடு, வளர் என்பவை வினைப்பகுதிகள்.
 
இவை முறையே கொடி, தமிழ் என்னும் பெயர்ச்சொற்களோடு சேர்ந்து காலம் காட்டாத பெயரெச்சங்களாக உள்ளன.
 
அதாவது காலம் காட்டும் இடைநிலைகள் தொக்கி உள்ளன.
 
மேலும் இவை முறையே ஆடிய கொடி, ஆடுகின்ற கொடி, ஆடும் கொடி எனவும் வளர்ந்த தமிழ், வளர்கின்ற தமிழ், வளரும் தமிழ் எனவும் முக்காலத்திற்கும் பொருந்தும்படி பொருள் தருகின்றன.
 
இவ்வாறு காலம் காட்டும் இடைநிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சத்தை வினைத்தொகை என்பர்.
 
காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை – ( நன்னூல் 364)
  
பண்புத்தொகை
 
வெண்ணிலவு, கருங்குவளை
 
இத்தொடர்களில் வெண்மை, கருமை என்னும் பண்புகள் நிலவு, குவளை என்னும் பெயர்ச்சொற்களைத் தழுவி நிற்கின்றன.
 
ஆன, ஆகிய என்னும் பண்புருபுகள் மறைந்து வெண்மையான நிலவு, கருமையாகிய குவளை என்னும் பொருள்களைத் தருகின்றன.
 
இவ்வாறு பண்புப் பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையே ஆன, ஆகிய என்னும் பண்புருபுகள் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.