PDF chapter test TRY NOW
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
பனைமரம்
இத்தொடர் பனையாகிய மரம் என விரியும். மரம் என்பது பொதுப்பெயர்.
பனை என்பது மரங்களுள் ஒன்றைக் குறிக்கும் சிறப்புப்பெயர்.
இவ்வாறு சிறப்புப் பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நிற்க, இடையில் ஆகிய என்னும் பண்புருபு மறைந்து வருவதை இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பர்.
உவமைத்தொகை
மலர்விழி இத்தொடர் மலர்போன்ற விழி என்ற பொருள் தருகிறது.
மலர் -உவமை, விழி - உவமேயம். இடையில் போன்ற என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது.
இவ்வாறு உவமைக்கும் உவமேயத்துக்கும் இடையில் போல, போன்ற, நிகர, அன்ன முதலிய உவம உருபுகளுள் ஒன்று மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.
உம்மைத்தொகை
இரவுபகல், தாய்தந்தை
இத்தொடர்கள் இரவும் பகலும் தாயும் தந்தையும் என விரிந்து பொருள் தருகின்றன.
இதில் சொற்களின் இடையிலும், இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருகிறது. இவ்வாறு சொற்களுக்கு இடையிலும், இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவதை உம்மைத்தொகை என்பர்.