PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை 
இன்மை புகுத்தி விடும்.
 
பொருள்:
 
முயற்சி செய்தால் ஒருவர்க்குச் செல்வம் பெருகும். முயற்சி இல்லாவிட்டால் அவருக்கு வறுமையே வந்து சேரும்.
 
பொறிஇன்மை யார்க்கும் பழிஅன் றறிவறிந்
தாள்வினை இன்மை பழி.
 
பொருள்:
 
ஐம்புலன்களில் ஏதேனும் குறையிருப்பினும் அது இழிவன்று. அறிய வேண்டியதை  அறிந்து முயற்சி செய்யாததே இழிவாகும்.
 
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்,
தாழா துஞற்று பவர்.
 
பொருள்:
 
சோர்விலாது முயற்சி செய்வோர் செய்கின்ற செயலுக்கு இடையூறாக வரும் முன்வினையையும் தோற்கடித்து வெற்றியடைவர்.
 
நன்றிஇல் செல்வம் (101)
 
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய
கோடி உண்டாயினும் இல்.
 
பொருள்:
 
பிறருக்குக் கொடுக்காமலும் தானும் அனுபவிக்காமலும் இருப்பவர் அடுக்கடுக்காய்ப் பல கோடிப் பொருள்கள் பெற்றிருந்தாலும் அதனால் பயன் இல்லை.
 
நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழத் தற்று.
 
பொருள்:
 
பிறருக்கு உதவி செய்யாததால் ஒருவராலும் விரும்பப்படாதவர் பெற்ற செல்வம், ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றதாகும்.
 
அணி: உவமையணி