PDF chapter test TRY NOW

     தமிழ்மொழி பேசவும் படிக்கவும் எழுதவும் உகந்த மொழி.
     உயிரும் மெய்யும் இணைவதால் தோன்றுபவை உயிர்மெய் எழுத்துகள். உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் ஆகியவற்றின் ஒலிப்பு முறைகளை அறிந்து கொண்டால் உயிர்மெய் எழுத்துகளை எளிதாக ஒலிக்கலாம். எழுத்துகளைக் கூட்டி ஒலித்தாலே தமிழ் படித்தல் இயல்பாக நிகழ்ந்துவிடும்.
(எ.கா.) அ +மு + து = அமுது.
     தமிழ்மொழியை எழுதும் முறையும் மிக எளிதுதான். இதற்கேற்ப, தமிழ் எழுத்துகள்
பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன.
(எ.கா.) வலஞ்சுழி எழுத்துகள் - அ, எ, ஔ, ண, ஞ
இடஞ்சுழி எழுத்துகள் - ட , ய, ழ
  • தமிழ் மொழியானது பேசவும், படிக்கவும், எழுதவும் மிக எளிதானது.
  • இதனாலேயே, தமிழ் எளிய தமிழ் எனவும் கூறப்படுகிறது. 
  • இதை, வேற எந்த மொழியிலும் காண இயலாது.
  • தமிழ்மொழி எழுத மட்டுமல்ல படிக்கவும் மிக எளிது.
  • தமிழ் ஓா் எழுத்துக்கும் ஒரே ஒலியானதால் அதை எவராலும் எளிதாக படிக்க முடியும்.
  • உயிரெழுத்து, மெய்யெழுத்து, கூட்டெழுத்து ஆகிய அனைத்தும் சோ்ந்து மொத்தம் 247 எழுத்துகள் உள்ளன.
  • இவைகளை அறியப் பொியவா்களுக்குச் சில வாரங்களும், சிறியவா்களுக்குச் சில மாதங்களும் போதுமானதாகும்.
  • அதன்பின் எடுத்த நூல்களை எல்லாம் படிக்கலாம்.
  • ஆகவே, தமிழ் படிக்கவும் மிக எளிதான ஒன்றாகும்.
  • தமிழ்மொழி பேசவும் எளிது.
  • தமிழ்ச் சொற்களில்  நூறு சொற்களை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு சொல்லாக ஒலித்துப் பாருங்கள்.
  • அவை ஒவ்வொன்றும் மேல்உதடு, கீழ் உதடு, மேற்ப்பல், கீழ்ப்பல், நுனிநாக்கு, அடிநாக்கு கொண்டே ஒலிப்பதாக இருக்கும். தொண்டைக்குக் கீழ் வராது.
  • வடமொழிச் சொற்களில் பெரும்பாலும் அடிவயிற்றின் துணையின்றி ஒலிக்க முடியாதவை.
  • இவை எல்லாம் வைத்து பாா்க்கும் போது தமிழ் மொழியானது எழுதவும், படிக்கவும், பேசவும் மிகவும் எளிமையானது என்பதை நன்கறியலாம்.