PUMPA - THE SMART LEARNING APP
AI system creates personalised training plan based on your mistakes
Download now on Google Playபெயர் வகைகள்
ஒரு பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல்.
நம் முன்னோர்கள் பெயர்ச்சொற்களை அவை வழங்கும் அடிப்படையில் இடுகுறிப்பெயர், காரணப்பெயர் என இருவகையாகப் பிரித்துக் கூறினர்.
இடுகுறி காரணப் பெயர்பொதுச் சிறப்பின் என்று நன்னூல் நூற்பா 62 கூறுகிறது.
இடுகுறிப்பெயர், காரணப்பெயர் என்னும் இரண்டு பல பொருளுக்குப் பொதுப் பெயராகவும், ஒவ்வொரு பொருளுக்கே சிறப்புப் பெயராகவும் வரும். எனவே,
பெயர் நான்கு வகைப்படும்.
1. இடுகுறிப் பொதுப் பெயர்
2. இடுகுறிச் சிறப்புப் பெயர்
3. காரணப் பொதுப் பெயர்
4. காரண சிறப்புப் பெயர்
இடுகுறிப்பெயர் :
கடல், நிலம், நாய், கோழி, காற்று, மா, தை, வாழை, பழம், மக்கள், காலம், பனை, நீர், கடல், கல், புல், விலங்கு பல், உடல், மண்.
ஒரு காரணமும் இல்லாமல் ஒரு பொருளுக்குத் தொன்றுதொட்டுச் சான்றோர்களால் இடப்பட்டு வழங்கும் பெயர் இடுகுறிப்பெயர் எனப்படும்.
காரணப் பெயர் :
நாற்காலி, மரங்கொத்தி, கரும்பலகை, சிறுவர், வேலன், பறவை, அணி, வளையல், வட்டம்.
ஏதேனும் ஒரு காரணம் பற்றி இட்டு வழங்கும் பெயர் காரணப் பெயர் எனப்படும்.
இடுகுறிப் பொதுப் பெயர் :
மக்கள், காலம், மண், மரம், காற்று
பல பொருளுக்கும் பொதுவாய் இடுகுறியாய் வழங்கப்படும் பெயர் இடுகுறிப் பொதுப்பெயர்.
இடுகுறிச் சிறப்புப் பெயர் :
மா, வாழை, தை, பனை
ஒவ்வொரு பொருளுக்கே சிறப்பாய் வழங்கப்படும் பெயர் இடுகுறிச் சிறப்புப் பெயர்.
காரணப் பொதுப் பெயர் :
சிறுவன், பறவை, அணி
காரணம் பற்றி பல பொருளுக்கும் சிறப்பாய் வழங்கப்படும் பெயர் காரணப் பொதுப்பெயர்.
காரணச் சிறப்புப் பெயர் :
வளையல், சிலம்பு, நாற்காலி
காரணம் பற்றி ஒவ்வொரு பொருளுக்கே சிறப்பாய் வழங்கப்படும் பெயர் காரணச் சிறப்புப் பெயர்.