PDF chapter test TRY NOW

வியங்கோள் வினைமுற்று
 
வாழ்த்துதல்
  
வைதல்
  
விதித்தல்
  
வேண்டல்
 
ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று  வியங்கோள்வினைமுற்று எனப்படும்.
 
இவ்வினைமுற்று
 
இருதிணைகளையும் - உயர்திணை, அஃறிணை
 
ஐந்து பால்களையும் - ஆண், பெண், பலர், ஒன்றன், பலவின்
 
மூன்று இடங்களையும் - தன்மை, முன்னிலை, படர்க்கை - காட்டும்.
 
இதன் விகுதிகள் க, இய, இயர், அல் என வரும்.
 
சான்று 
  
வாழ்க 
  
ஒழிக 
  
வாழியர் 
 
வாரல்
  
ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் உள்ள வேறுபாடுகள்
 
ஏவல்  வினைமுற்று
வியங்கோள்  வினைமுற்று
முன்னிலையில் வரும்
இருதிணை, ஐம்பால், மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும்
ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு
ஒருமை,பன்மை வேறுபாடு இல்லை
கட்டளைப் பொருளை மட்டும் உணர்த்தும்
வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களை உணர்த்தும்
விகுதி பெற்றும் பெறாமலும் வரும்
விகுதி பெற்றே வரும்
 
விதித்தல் பொருளில் வரும் வியங்கோள்  வினைமுற்று, தன்மை இடத்தில் வராது.
 
இயர், அல் ஆகிய இரண்டு விகுதிகள் தற்கால வழக்கில் இல்லை.
 
செய்யுள் வழக்கில் மட்டுமே உள்ளன.