PDF chapter test TRY NOW
குறிப்பு வினை
குறிப்புவினை என்பது பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறனுள் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு தோன்றி, வினை உணர்த்துவதாக அமையும்.
இது, பேசுவோரின் குறிப்பிற்கேற்பக் காலத்தைக் குறிப்பாக உணர்த்தும்.
குறிப்பு வினைமுற்று
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவற்றுள் ஒன்றனை அடிப்படையாகக் கொண்டு காலத்தை வெளிப்படையாகக் காட்டாது
செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று, குறிப்புவினைமுற்று எனப்படும்.
பொருள் - பொன்னன்
சினை - கண்ணன்
இடம் - தென்னாட்டார்
பண்பு (குணம்) - கரியன்
காலம் - ஆதிரையான்
தொழில் - எழுத்தன்
தெரிநிலை, குறிப்பு வினைமுற்றுகள் அன்றி ஏவல் வினைமுற்று, வியங்கோள் வினைமுற்று எனப் பிறவகை வினைமுற்றுகளும் தமிழில் உண்டு.
ஏவல் வினைமுற்று
பாடம் படி
கடைக்குப் போ
இத்தொடர்கள் ஒரு செயலைச் செய்யுமாறு கட்டளையிடுகின்றன.
இவ்வாறு தன்முன் உள்ள ஒருவரை ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் வினைமுற்று, ஏவல் வினைமுற்று எனப்படும்.
ஏவல் வினைமுற்று ஒருமை, பன்மை என இரு வகைகளில் வரும்.
சான்று
எழுது - ஒருமை
எழுதுமின் - பன்மை
பன்மை ஏவல் வினைமுற்று எழுதுங்கள் என வருவது இக்கால வழக்கு.