PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இரு சொற்கள் ஒன்றோடு ஒன்று  இணைந்து வருவது புணர்ச்சி.
 
இது சந்தி என்னும் வடசொல்லாலும் குறிப்பிடுகின்றனர்.
 
இரு சொற்களில், முதல்சொல் என்பது நிலைமொழி, இரண்டாம்சொல் என்பது வருமொழி
 
மெய் உயிர் முதல் ஈறு ஆம் இரு பதங்களும்,
தன்னொடும் பிறிதொடும், அல்வழி வேற்றுமைப்
பொருளில் பொருந்துழி, நிலைவரு மொழிகள்
இயல்பொடு விகாரத்து இயைவது புணர்ப்பே. 
நன்னூல் நூற்பா எண் - 151
நூற்பா சொல்லுக்கான பொருள் : 
 
ஈறு - இறுதி
 
இரு பதங்கள் - பகாப்பதம், பகுபதம்
 
பொருந்துழி - சேர்ந்து வரும்பொழுது
 
நிலை, வருமொழிகள் - நிலை மொழியும் வருமொழியும்
 
இயைவது - பொருந்துவது, சேர்வது
 
புணர்ப்பு - புணர்ச்சி
 
நன்னூல் இலக்கண நூற்பாபடி,
  
1. எழுத்துகளின்  அடிப்படை
  
2. பதங்களின்  அடிப்படை
  
3. பொருளின்  அடிப்படை
  
4. எழுத்து மாற்றத்தின்  அடிப்படை
 
ஆகிய நான்கு வகை நிலைகளில்  புணர்ச்சியைப் பாகுபடுத்துகிறார்.
எழுத்துகளின் அடிப்படையில் புணர்ச்சிப் பாகுபாடு
தமிழில் உள்ள பதங்கள் (சொற்கள்) எல்லாம் மெய் எழுத்தையும், உயிர் எழுத்தையும் முதலும் ஈறும்
ஆக உடையவை என்பது நாம் அறிந்ததே. 
மெய் உயிர் முதல் ஈறு ஆம் இரு பதங்களும்
நன்னூல் நூற்பா எண்- 151-1
எனவே பதங்கள், எழுத்து அடிப்படையில் நான்கு ஆகும்.  
 
1. உயிர் முதல் உயிர் ஈறு
 
அணி - உயிர் முதல் அ; உயிர் ஈறு இ (ண்+இ=ணி).
 
2. உயிர் முதல் மெய் ஈறு
 
அணில் - உயிர் முதல் அ; மெய் ஈறு ல்.
 
3. மெய் முதல் உயிர் ஈறு
 
மணி - மெய் முதல் ம் (ம்+அ=ம)  உயிர் ஈறு இ (ண்+இ=ணி)
 
4. மெய் முதல் மெய் ஈறு
 
பல் - மெய் முதல் ப் (ப்+அ=ப) மெய் ஈறு  ல்
 
இவ்வாறு, அமையும் பதங்களே புணர்ச்சியில் நிலைமொழியாகவும் வருமொழியாகவும் வரும்.  நிலைமொழியின் ஈற்று எழுத்தும், வருமொழியின் முதல் எழுத்தும் ஒன்றோடு ஒன்று பொருந்தி நிற்பதே புணர்ச்சி எனப்படும். 
 
நிலைமொழி ஈற்றில் உயிர் அல்லது மெய் எழுத்து இருக்கும். வருமொழி முதலிலும் உயிர் அல்லது மெய் எழுத்து இருக்கும். 
எனவே நிலைமொழியின் ஈற்றிலும், வருமொழியின் முதலிலும் இருக்கும் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டு, புணர்ச்சியை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.  
1. உயிர் ஈற்றின் முன் உயிர் வரல்  - நிலைமொழி இறுதி உயிர் + வருமொழி முதல் உயிர்
 
ணி + டித்தான்  (இ முன் அ வரல்)
 
2.உயிர் ஈற்றின் முன் மெய் வரல் - நிலை மொழி இறுதி உயிர் + வருமொழி முதல் மெய்
 
ணி + கொடுத்தான் (இ முன் க் வரல்)
  
3.மெய் ஈற்றின் முன் உயிர் வரல் - நிலைமொழி இறுதி மெய் + வருமொழி முதல் உயிர்
 
கால் + ணி (ல் முன் அ வரல்)
  
4. மெய் ஈற்றின் முன் மெய் வரல் - நிலை மொழி இறுதி மெய் + வருமொழி முதல் மெய்
 
கால் + விரல்   (ல் முன் வ் வரல்).