PDF chapter test TRY NOW

பகுபத உறுப்பிலக்கணம்
பதம் (சொல்) இரு வகைப்படும். அவை பகுபதம், பகாப்பதம் ஆகும். பிரிக்கக்கூடியதும், பிரித்தால் பொருள் தருவதுமான சொல் பகுபதம் எனப்படும்.
இது பெயர்ப் பகுபதம், வினைப் பகுபதம் என இரண்டு வகைப்படும்.
 
பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும்.
 
பகுதி (முதனிலை)
சொல்லின் முதலில் நிற்கும் பகாப் பதமாக அமையும்: வினைச்சொல்லில் ஏவலாகவும், பெயர்ச் சொல்லில் அறுவகைப் பெயராகவும் அமையும்.
விகுதி (இறுதிநிலை)
சொல்லின் இறுதியில் நின்று திணை, பால், எண், இடம் காட்டுவதாகவும் அமையும்.
இடைநிலை
பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலம் காட்டும்.
சந்தி
பகுதியையும் பிற உறுப்புகளையும் இணைக்கும் பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும்.
சாரியை
பகுதி, விகுதி, இடைநிலைகளைச் சார்ந்து வரும்: பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும்.
விகாரம்
தனி உறுப்பு அன்று மேற்கண்ட பகுபத உறுப்புகளில் ஏற்படும் மாற்றம்.
 
பகுதி :
ஊரன் - ஊர்வரைந்தான் - வரை
நடிகன் - நடி
மடித்தார் - மடி
பார்த்தான் -பார்
மகிழ்ந்தாள் - மகிழ்