PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
வினை வகைகள் - தன்வினை, பிறவினை
 
மாணவர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள். எங்கும் விளையாட்டு, மகிழ்ச்சியின் ஆரவாரம். கண்ணன் முகமதுவை நோக்கி, “பந்தை என்னிடம் உருட்டு” என்று கத்தினான். முகமது பந்தைக் கண்ணனிடம் உருட்டினான். பந்து உருண்டது. கண்ணன் முகமது மூலம் பந்தை உருட்ட வைத்தான்.
 
மேற்கண்ட சூழலில்,
 
பந்து உருண்டது என்பது தன்வினை.
 
உருட்ட வைத்தான் என்பது பிறவினை.
 
எழுவாய் ஒரு வினையைச் செய்தால் அது தன்வினை எனப்படும்.
 
எழுவாய் ஒரு வினையைச் செய்ய வைத்தால் அது பிறவினை எனப்படும்.
 
பிறவினைகள், வி, பி போன்ற விகுதிகளைக் கொண்டும் செய், வை,பண்ணு போன்ற துணை வினைகளை இணைத்தும் உருவாக்கப்படுகின்றன.
 
 
தன்வினை
 
 
அவன் திருந்தினான்
 
அவர்கள் நன்றாகப் படித்தனர்
பிறவினை
அவனைத் திருந்தச் செய்தான்
 
தந்தை மகனை நன்றாகப் படிக்க வைத்தார்.
 
பள்ளிக்குப் புத்தகங்கள் வருவித்தார்