PDF chapter test TRY NOW

விளையாடுபவன் யார்?
 
இங்கு யார் என்னும் வினாச்சொல் பயனிலையாக வந்துள்ளது.
 
இது வினாப் பயனிலை எனப்படும்.
 
சில இடங்கள் தவிர, ஒரு சொற்றொடரில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் மூன்றும் இந்த வரிசையில்தான் வரவேண்டும் என்று எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
 
தமிழின் தொடர் அமைப்பின் சிறப்புகளுள் இதுவும் ஒன்று.
 
எடுத்துக்காட்டு:
 
நான் பாடத்தைப் படித்தேன் (எழுவாய், செயப்படுபொருள், பயனிலை)
 
பாடத்தை நான் படித்தேன் (செயப்படுபொருள், எழுவாய், பயனிலை)
 
படித்தேன் நான் பாடத்தை (பயனிலை, எழுவாய், செயப்படுபொருள்)
 
நான் படித்தேன் பாடத்தை (எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்)
 
பாடத்தைப் படித்தேன் நான் (செயப்படுபொருள், பயனிலை, எழுவாய்)
  
நல்ல நூல் ஒன்று படித்தேன். 
 
இத்தொடரில் நல்ல என்னும் சொல், எழுவாயாக வரும் நூல் என்னும்  பெயர்ச் சொல்லுக்குஅடையாக வருகிறது. இவ்வாறு அமைவதனைப் பெயரடை என்கிறோம்.
 
மகிழ்நன் மெல்ல வந்தான்.
 
இத்தொடரில் மெல்ல என்னும் சொல், வந்தான் என்னும் வினைப் பயனிலைக்கு அடையாக வருகிறது. இதை வினையடை என்கிறோம்.