PDF chapter test TRY NOW

நால்வகைக் குறுக்கம்
குறுக்கம் நான்கு வகைப்படும். குறுக்கம் என்பது குறுகி ஒலிப்பது.
  
  
20.png
7. ஐகாரக் குறுக்கம்
  என்னும் உயிர்நெடில் எழுத்து தனித்து ஒலிக்கும் மாத்திரை அளவு இரண்டு.
 
பை, தை, மை, கை என்பதான ஓரெழுத்து ஒருமொழியிலும் ஒலிக்கும் மாத்திரை அளவு இரண்டு.
 
தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து ஒன்றரை அல்லது ஒரு மாத்திரையாகவோ குறைந்து ஒலித்தால் அது ஐகாரக் குறுக்கம் எனப்படும்.
- எழுத்தைத் தனியாக உச்சாிக்கும் பொழுது தனக்குாிய இரண்டு மாத்திரை அளவிலேயே முழுமையாக ஒலிக்கும் என்பதைக் கண்டோம்.
 
- எழுத்தைச் சொல்லாக அமைத்தால், அது தன் மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும்.
 
அது சொற்களின் முதலிலும், இடையிலும், இறுதியிலும் (கடையிலும்) ஆகிய மூன்று இடத்திலும் ஐகாரமானது குறைந்து ஒலிக்கும்.
மையம் - (ம்+ஐ=மை) மொழி முதலில் வந்த ஐகாரமானது, தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒன்றரை (1 ½) மாத்திரையாக ஒலிக்கும்.
மைச்சு - (ம்+ஐ=மை) மொழி இடையில் வந்த ஐகாரமானது, தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒரு  மாத்திரையாக ஒலிக்கும்.
கடலை – (ல்+ஐ=லை) மொழி இறுதியில் (கடையில்) வந்த ஐகாரமானது, தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒரு மாத்திரையாக ஒலிக்கும்.
8. ஔகாரக் குறுக்கம் 
என்னும் உயிர்நெடில் எழுத்து தனித்து ஒலிக்கும் மாத்திரை அளவு இரண்டு.
தனக்குரிய மாத்திரை அளவிலிருந்து ஒன்றரை மாத்திரையாகக் குறைந்து ஒலித்தால் அது ஔகாரக் குறுக்கம் எனப்படும்.
ஔ, வௌ - எழுத்தைத் தனியாக உச்சாிக்கும் பொழுது தனக்குாிய இரண்டு மாத்திரை அளவிலேயே முழுமையாக ஒலிக்கும்.
 
- எழுத்தைச் சொல்லாக அமைத்தால் அது தன் இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து, ஒன்றரை (1½) மாத்திரையாக ஒலிக்கும். 
 
அது சொற்களின் முதலில் மட்டுமே வரும்.
 
சொற்களின்இடையிலும், இறுதியிலும் (கடையிலும்) ஔகாரம் வராது.
கௌதமி - (க் + ஔ = கௌ) மொழி முதலில் வந்த ஔகாரமானது, தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒன்றரை (1½) மாத்திரையாக ஒலிக்கும்.
  
ஔடதம், கெளரி, ஔவியம், கௌதாாி.
 
இச்சொற்களிலும் ஔகாரமானது தனக்குாிய இரண்டு மாத்திரையிலிருந்து குறைந்து ஒலிப்பதைக் காண்கிறோம்.
9. மகரக் குறுக்கம் 
ம் - மெய் எழுத்து தனக்கான அரை (½) மாத்திரை அளவில் இருந்து குறைந்து கால் (1/4) மாத்திரையாக ஒலிப்பதே மகரக் குறுக்கம்.
 
வரும் வண்டி, பெறும் வணிகன், தரும் வளவன், பலம் வாய்ந்தவன். 
 
மேற்காணும் சொற்களில் மகரத்தைத் தொடர்ந்து வகரம் வந்துள்ளதால், மகரம் தனக்குரிய அரை (½) மாத்திரையில் இருந்து குறைந்து கால் (1/4) மாத்திரையாக ஒலிக்கிறது.
 
போலும் – என்னும் சொல்லைப் போன்ம் என்றும் மருளும் – என்னும் சொல்லை மருண்ம் என்றும் செய்யுளில் வரும்.
 
ன், ண் அடுத்து வரும் ம் தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரையாக ஒலிக்கிறது.
10. ஆய்தக் குறுக்கம்
– தனித்து ஒலிக்கும்போதும், அது, இது – மொழி இடையில் மட்டும் வரும்போதும்  ஆய்த எழுத்து தனக்குரிய அரை மாத்திரை அளவில் ஒலிக்கிறது.
ஃ - ஆய்த எழுத்து தனக்கான அரை (½) மாத்திரை அளவில் இருந்து குறைந்து கால் (1/4) மாத்திரையாக ஒலிப்பதே ஆய்தக் குறுக்கம்.
கல் + தீது = கறீது
 
முள் + தீது = முடீது 
 
பல் + ஒளி = பறுளி
 
மேற்காணும் சொற்களில், மொழி இடையில் உள்ள ஆய்தம், தனக்குரிய அரை (½) மாத்திரையில் இருந்து குறைந்து கால் (1/4) மாத்திரையாக ஒலிக்கிறது.