Theory:
ஆய்தம் (ஃ) :
அஃகு, இஃது, பஃறி, எஃகு - இச்சொற்களின் இடையில் அமைந்துள்ள எழுத்துகளை ஆய்த எழுத்து என்பர்.
ஃ - மூன்று புள்ளிகளைக் கொண்ட வடிவம்.
ஒலிக்கும் மாத்திரை அளவு அரை (1/2)
மெய் அல்லது ஒற்று எழுத்தாகக் கருதுவர்.
அஃகேனம், தனிநிலை, முப்புள்ளி, முப்பாற் புள்ளி என்னும் வேறுசில பெயா்களும் உண்டு.
அஃகேனம் - 247 தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையில் தனித்த எண்ணிக்கை கொண்ட எழுத்து.
ஆனால், தனித்து இயங்காது.
தனக்கு முன் ஒரு குறில் எழுத்தையும், பின் ஒரு வல்லின உயிா்மெய் எழுத்தையும் சாா்ந்து வரும்.
தனித்த எண்ணிக்கை கொண்டதால் இதனைத் தனிநிலை எழுத்து என்றும் கூறுவர்.