PDF chapter test TRY NOW

அடி
 
இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டு அமைவது அடி ஆகும்.
 
அடி ஐந்து வகைப்படும்.
 
தொடை
 
செய்யுளில் ஓசைஇன்பமும் பொருள்இன்பமும் தோன்றும் வகையில் சீர்களுக்கு இடையிலோ, அடிகளுக்கு இடையிலோ அமையும் ஒற்றுமையே தொடை ஆகும்.
 
தொடை எட்டு வகைப்படும்.
 
முதன்மையான தொடைகள் வருமாறு :
 
1. முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை.
 
2. இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை.
 
3. இறுதி எழுத்து அல்லது இறுதி ஓசை ஒன்றிவரத் தொடுப்பது இயைபு.
 
4. ஒரு பாடலின் இறுதிச்சீர் அல்லது அடியின் இறுதிப்பகுதி அடுத்த பாடலின் முதல்சீர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடப்படுவது அந்தாதித் தொடை.
 
பா வகைகள்
 
பா நான்கு வகைப்படும்.
 
அவை,
  
வெண்பா
  
ஆசிரியப்பா
  
கலிப்பா
  
வஞ்சிப்பா
 
வெண்பா
 
செப்பல் ஓசை உடையது. அறநூல்கள் பலவும் வெண்பாவால் அமைந்தவை. 
ஆசிரியப்பா
 
அகவல் ஓசை உடையது. சங்க இலக்கியங்கள் பலவும் ஆசிரியப்பாவால் அமைந்தவை. 
 
கலிப்பா
 
துள்ளல் ஓசை உடையது. கலித்தொகை கலிப்பாவால் ஆனது. 
 
வஞ்சிப்பா
 
தூங்கல் ஓசை உடையது.