PDF chapter test TRY NOW

யாப்பின் உறுப்புகள் கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணமே யாப்பிலக்கணம்.
 
இது பாக்கள் பற்றியும் அவற்றின் உறுப்புகள் பற்றியும் விரிவாகப் பேசுகிறது.
 
உறுப்பியலில் யாப்பின் ஆறு உறுப்புகளான
 
எழுத்து
  
அசை
  
சீர்
  
தளை
  
அடி
  
தொடை ஆகியவை விளக்கப்படுகின்றன.
 
எழுத்து யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துகள் குறில், நெடில், ஒற்று என மூவகைப்படும்.
 
அசை
 
எழுத்துகளால் ஆனது அசை எனப்படும்.
 
ஓரெழுத்தோ, இரண்டெழுத்தோ நிற்பது அசை ஆகும்.
 
இது நேரசை, நிரையசை என இரு வகைப்படும்.
 
அசைப்பிரிப்பில் ஒற்றெழுத்தைக் கணக்கிடுவதில்லை.
 
நேரசை
 
தனிக்குறில் - ப
  
தனிக்குறில், ஒற்று - பல்
  
தனிநெடில் - பா
  
தனிநெடில், ஒற்று - பால்
 
நிரையசை
  
இருகுறில் - அணி
  
இருகுறில், ஒற்று - அணில்
  
குறில், நெடில் - விழா
  
குறில், நெடில், ஒற்று - விழார்
 
சீர்
 
ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அசைகளின் சேர்க்கை சீர் ஆகும்.
 
இதுவே பாடலில் ஓசைக்கு அடிப்படையாய் அமையும்.
 
ஓரசைச்சீர்
 
ஈரசைச்சீர்
 
மூவசைச் சீர்
 
நாலசைச்சீர்
 
எனச் சீர்கள் நான்கு வகைப்படும்.