PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நாம் காணும் எல்லா பொருட்களும் ஒரே மாதிரி இயங்குவதில்லை. பல்வேறு வகையான இயக்கங்கள் உள்ளன. வெவ்வேறு பொருட்கள் வெவ்வேறு வழியில் நகரும். ஒவ்வொன்றும் அதன் சொந்த இயக்க முறைகளைக் கொண்டுள்ளன. பொருட்கள் மற்றும் பொருட்களின் இந்த இயக்கம், அப்பொருளின்  இயக்கம் என்று அழைக்கப்படுகிறது.
 
உதாரணமாக:
 
ஓர் அறையில் இங்கும் அங்குமாக நகரும் ‘’ ஒன்றின் இயக்கத்தைப் பாருங்கள். ஒரு காகித அம்புகுறியை எறிந்து, அது தரையில் எவ்வாறு இறங்குகிறது என்பதைக் கவனியுங்கள். ஈயின் அசைவும், காகித அம்பும் வித்தியாசமாக இருப்பதை கவனித்தீர்களா?
 
1.png2.png
ஒழுங்கற்ற இயக்கத்தில் நகரும் ஈக்கள், காகித அம்பு
 
ஈக்கள் ஒழுங்கற்ற இயக்கத்தில் நகரும், காகித அம்பு ஒரு ஒப்பீட்டளவில் மென்மையான வளைவுப்பாதை இயக்கத்தைக் கொண்டிருக்கும்.
 
பொருள்கள் அவை செல்லும் பாதையின் அடிப்படையில் ஆறு வகையான இயக்கங்களாக வகைப்படுத்தலாம்.
 
1. நேர்க்கோட்டு இயக்கம்:
  
3.png
நேராக நகரும் கோடு,
 
நேர்கோட்டுப் பாதையில் நடைபெறும் இயக்கம்.
 
உதாரணமாக:
 
நேரான சாலையில் நடந்து செல்லும் நபர்
 
2. வளைவுப்பாதை இயக்கம்:
 
5.png
வளைந்த பாதையில் நகரும் போது,
 
முன்னோக்கிச் சென்று கொண்டு, தனது பாதையின் திசையைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கும் பொருளின் இயக்கம்.
 
உதாரணமாக:
 
ஒரு எறியப்பட்ட பந்து
 
3. வட்டப்பாதை இயக்கம்:
 
வட்டப்பாதை இயக்கம் என்பது ஒரு வட்டத்தின் சுற்றளவைச் சுற்றியுள்ள ஒரு பொருளின் இயக்கம் அல்லது ஒரு வட்டப் பாதையைச் சுற்றி ஒரு பொருளின் சுழற்சி என வரையறுக்கப்படுகிறது.
 
clock13006461280.png
கடிகாரத்தின் இயக்கம்,
 
 உதாரணமாக:
 
கடிகாரத்தில் உள்ள கடிகார முள்களின் இயக்கம்
 
4. தற்சுழற்சி இயக்கம்:
 
ஒரு அச்சினை மையமாகக் கொண்டிருக்கும் பொருளின் இயக்கம்.
 
spinningtop235555960720.jpg
பம்பரத்தின் இயக்கம்
 
உதாரணமாக:
 
பம்பரத்தின் இயக்கம்
 
5. அலைவு இயக்கம்:
 
ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் முன்னும் பின்னுமாகவோ அல்லது இடம் வலமாகவோ மாறி மாறி நகரும் பொருளின் இயக்கம்.
 
7.png
தனி ஊசலில் குண்டின் இயக்கம்
 
உதாரணமாக:
 
தனிஊசல்
 
6. ஒழுங்கற்ற இயக்கம்:
 
வெவ்வேறு திசையில் நகரும் பொருளின் இயக்கம்.
 
8.png
தேனீயின் இயக்கம்
 
உதாரணமாக:
 
ஒரு தேனீயின் இயக்கம்