PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பல்லிகள் ஊர்வன வகையைச் சேர்ந்தவை, பல்வேறு வாழ்விடங்களில் வாழ்கின்றன. இவை அண்டார்டிகாவைத் தவிர, பூமியின் அனைத்து சூழ்நிலைகளிலும் கிட்டத்தட்ட \(5000\) இனங்கள் வரை காணப்படுகின்றன.
 
1. பல்லிகள் செதில் தோல் கொண்ட ஊர்வன வகையைச்  சார்ந்தவை. அவை பொதுவாகப்  பாம்புகளிலிருந்து கால்கள், அசையும் கண் இமைகள் மற்றும் வெளிப்புற காது திறப்புகளால் வேறுபடுகின்றன.
 
shutterstock_1353251147.jpg
செதில் பல்லி
 
2. அவை பெரும்பாலும் வெப்பமான பகுதிகளில் வசிக்கின்றன. பெரும்பாலான பல்லிகள் நான்கு கால்கள் கொண்டு நடக்கக் கூடியவை மற்றும் இவற்றின் கால்கள் சக்திவாய்ந்தவை.
 
3. சில பல்லி வகைகள் இரண்டு கால்களால் ஓடக்கூடியவை. அவ்வாறு ஓடும் போது பல்லியின் வால் பகுதி முழு உடல் எடையைத் தாங்கும் வகையில் பின்னோக்கியும், மேல் நோக்கியும் அமைந்திருக்கும். தன்னை வேட்டையாடும் விலங்கிடமிருந்து தப்பிக்க வேண்டியிருக்கும் போது, அதன் வால் உடலை விட்டுப் பிரித்து விடும் நிகழ்விற்கு இழப்பு மீட்டல் (Regeneration)என்று பெயர்.
 
பல்லி வால் பலவாறு பயன்படுகிறது. அவை உடலின் சமநிலை மற்றும் இயக்கத்திற்கு உதவுகின்றன, மேலும் இது கொழுப்புச் சேமிப்பிற்கான ஒரு பகுதியாகும்.
 
4. சில பல்லிகள் தலை இணைப்பின் உதவியுடன், முழுமையாகத்  தலையைச் சுழற்றும் திறன் கொண்டவை.
 
shutterstock_1433582588.jpg
பல்லிகளின் தலை சுழலும் திறன்
 
5. பல்லிகள் நுரையீரல் வழியாகச்  சுவாசிக்கின்றன.
  
6. ஊர்ந்து செல்லும் பூச்சிகளைத் தவிர, பெரும்பாலான பல்லிகள் கொசுக்கள் மற்றும் கரப்பான் பூச்சிகள் போன்ற பலவகையான பூச்சிகளை உணவாக உட்கொள்கின்றன. பல்லிகள் சுவர்களில் ஒட்டிக்கொள்ளும் மற்றும் ஏறும் திறனால், இவற்றால் பறக்கும் இரையை எளிதாகப்  பிடிக்க முடியும். இதன் நாக்கில் உள்ள நீட்சி போன்ற பகுதிகள் இரையைப் பிடிக்கப்  பயன்படுகின்றன.
 
shutterstock1560966584jpg.jpg
பல்லிகளின் பற்களின் வடிவங்கள்
 
7. கெக்கோ வகைப் பல்லிகள்  பறக்கும் தன்மையையும், மென்மையான பாதுகாப்புடன் தரையிறங்கும் தன்மையும் கொண்டிருக்கும். மேலும் டைனோசர் வகைப் பல்லிகளின் கால்களில் விரலிடை சவ்வுகள் இருக்கும்.
 
shutterstock1724918167jpg.jpg
கெக்கோ வகைப் பல்லி
 
8. பாலைவனங்களில் வாழும் பல்லிகள், பாலைவனத்தில் உள்ள அதிகப்படியான சூரிய வெப்பத்தில் இருந்து தப்பிக்கவும், உணவு தேடுவதற்கும்துளைகள் தோண்டுவதற்கும், கூர்மையான நகங்களைப் பயன்படுத்துகின்றன. கூர்மையான நகங்களின் உதவியுடன் சில வகைப் பல்லிகள் மரங்களிலும்  ஏறுகின்றன.
 
shutterstock_33089470.jpg
பல்லி நகங்கள்
 
9. பச்சோந்திகள் பல்லி இனத்தைச்  சார்ந்தவை. இவை தங்கள் உடலின் நிறத்தைச் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றும் திறன் பெற்றவை.
 
shutterstock_51675307.jpg
பச்சோந்தி