PDF chapter test TRY NOW

நம்மைச்  சுற்றி நாம் காணும் விலங்குகள் உட்பட உலகில் இருக்கும் பெரும்பாலான உயிரினங்கள் பல செல் உயிரிகள் ஆகும், இவ்வகை உயிரினங்களில் பல வகை செல்களின் தொகுப்பு மற்றும் அவற்றின் உறுப்புகள், அனைத்து அத்தியாவசிய செயல்பாடுகளையும் செய்கின்றன.
ஒன்றுக்கும் மேற்பட்ட உயிரணுக்களால் ஆன உயிரினங்கள் பல செல் உயிரினங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
செல்கள் ஒன்றிணைந்து வெவ்வேறு திசுக்களை உருவாக்குகின்றன. திசுக்கள் உறுப்புகளை உருவாக்குகின்றன. உறுப்புகள் சிறப்புச் செயல்பாடுகளைச் செய்யும் ஒரு உறுப்பு அமைப்பை உருவாக்குகின்றன.
Example:
ஜெல்லி மீன், மண் புழு, நத்தை, மீன், தவளை, பாம்பு, புறா, காகம், புலி, சிங்கம் மற்றும் மனிதன்.
multi.png
மேலிருந்து வலப்புறமாக:தவளை, ஜெல்லி மீன், மீன், புறா மற்றும் மண் புழு
 
பல செல் உயிரினங்களில் காணப்படும் ஒவ்வொரு வகை செல்களும் சிறப்பு வாய்ந்தவை. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு பணிகளைச் செய்கின்றன.
Example:
நரம்பு செல்கள், தசை செல்கள், தோல் செல்கள், இரத்த அணுக்கள் மற்றும் பிற செல் வகைகள்.
Design - YC IND (5).png
மனிதச்  செல்கள்
செல்கள் ஒவ்வொன்றும் அதன் செயல்பாட்டுடன் தொடர்புடைய வெவ்வேறு கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன. அனைத்து உயிரணுக்களும் ஒரே மாதிரியான நுண்ணுறுப்புகளைக் கொண்டுள்ளன. ஆனால், நுண்ணுறுப்புகளின் எண்ணிக்கை மற்றும் வகை செயல்பாடுகளுக்கு ஏற்ப வேறுபடுகின்றன. இவ்வாறு, செல்களுக்குள் இருக்கும் உறுப்புகளுக்கு ஏற்ப வெவ்வேறு செல்கள் வித்தியாசமாக உள்ளன.
ஒரு செல் மற்றும் பல செல்லுயிரினங்களுக்கு இடையிலான வேறுபாடுகள்:
 
ஒரு செல் உயிரினங்கள்
  • ஒற்றைச் செல்லால் ஆனவை.
  • இவ்வகை உயிரினத்தில்  ஒற்றைச் செல் வாழ்க்கையின் அனைத்து செயல்பாடுகளையும் செய்கிறது.
  • உயிரினங்கள் பொதுவாக மிகவும் சிறியவை. நமது கண்களால் பார்க்க முடியாது. நுண்ணோக்கியால் மட்டுமே காண இயலும்.
  • இவை திசுக்கள், உறுப்புகள் மற்றும் உறுப்பு அமைப்புகளைக் கொண்டிருக்கவில்லை.
  • உயிரணுவின் அளவு அதிகரிப்பதன் மூலம் வளர்ச்சி ஏற்படுகிறது.
Example:
அமீபா, பாரமீசியம் மற்றும் யூக்ளீனா
பல செல் உயிரினங்கள்
  • பல உயிரணுக்களால் ஆனவை.
  • உயிரணுக்களிடையே உழைப்புப் பிரிவு உள்ளது. வெவ்வேறு செல்கள் வெவ்வேறு செயல்பாடுகளைச் செய்ய நிபுணத்துவம் பெற்றவை.
  • பல செல் உயிரினங்கள் பொதுவாக அளவில் பெரியவை.
  • இவை திசுக்கள், உறுப்புகள் மற்றும் உறுப்பு அமைப்புகளால் ஆனவை.
  • உயிரணுப் பிரிவின் மூலம் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வளர்ச்சி ஏற்படுகிறது.
Example:
மண்புழுக்கள், மீன்கள், தவளைகள், பல்லி மற்றும் மனிதர்கள்