PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
மேற்கண்ட பல சோதனைகளைக் கொண்டு காற்று ஒரே விதமான துகள்களைக் கொண்டது அல்ல என அறிய இயலும். இதுவே காற்றின் இயல்பு ஆகும்.
 
பெரும் பகுதி காற்றில் உள்ளது நைட்ரஜன் வாயு  (ஐந்தில் நான்கு பங்கு - 78%) ஆகும். இரண்டாவது இடம் பிடிப்பது ஆக்ஸிஜன் வாயு (ஐந்தில் ஒரு பங்கு - 21%) ஆகும். மேலும் இவற்றைத் தவிர்த்து கார்பன்-டை-ஆக்ஸைட், நீராவி, ஆர்கான், ஹீலியம் போன்றவை உள்ளன. மிகவும் சிறிய அளவில் தூசுப் பொருட்களும் உள்ளன.
 
YCIND20052022_3757_Air_TN_6th_Tamil_5.png
காற்றில் உள்ள வாயுக்கலவை
 
காற்றின் இயல்பு இடத்திற்கு இடம் மாறுபடும். எடுத்துக்காட்டாக,
  • தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இடங்களில் கார்பன்-டை-ஆக்ஸைட் வாயுஅதிகம் இருக்கும்.
 shutterstock1015328077.jpg
  • கடலோரப் பகுதிகளில் காற்றில் நீராவிஅதிகம் இருக்கும்.
chile-g338367b47_1920.jpg
  • காற்றின் ஈரப்பதம் மழைக்காலத்தில் அதிக அளவில் இருக்கும்.
corgi-g39a068c7c_1920.jpg
  • விசாலமான இடங்களில் மற்றும் வாகனங்கள் செல்லும் சாலைகளில் காற்றில் தூசுப் பொருட்கள் காணப்படும்.
farming-climate-change-g7a8f7d8c6_1920.jpg
 
காற்றில் உள்ள தூசுப்பொருட்களைக் கண்டறியும் சோதனை:
  
நம்மால் சூரிய ஒளி ஊடுருவும் இடங்களில் காற்றில் தூசிப் பறப்பதைக் காண இயலும்.
 
pexels-anastasia-shuraeva-4122915.jpg