PDF chapter test TRY NOW

இங்கு, தமிழகத்தின் முக்கிய மின்நிலையங்கள் பற்றியும், மின் உற்பத்தி நிலையங்கள் எவ்வாறு மின் உற்பத்தி செய்கின்றன, என்பதை  தெரிந்து கொள்வோம்.
 
1. அனல்மின் நிலையங்கள்
  
தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி, திருவள்ளூர் மாவட்டத்தில் எண்ணுர், ஆகிய இடங்களில் அனல்மின் நிலையங்கள் அமைந்தள்ளன.
 
JiangsuNantongpowerstation.jpg
அனல்மின் நிலையங்கள்
 
அனல்மின் நிலையங்களில் நிலக்கரி, டீசல் அல்லது வாயுக்களை எரிப்பதன் மூலம் கிடைக்கும் வெப்ப ஆற்றலால் நீராவி உருவாக்கப்படுகிறது. இந்த நீராவியால் டர்பைன் இயங்குகிறது. டர்பைன் இயங்கும் பொழுது இரு மின்காந்தங்களுக்கு இடையில் வைக்கப்பட்டுள்ள கம்பிச்சுருள் சுழல்வதால் உருவாகும் மின்காந்தத் தூண்டலால் மின்சாரம் உருவாக்கப்படுகிறது. இங்கு வெப்ப ஆற்றலானது மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.
 
2. நீர்மின் நிலையங்கள்
 
 சேலம் மாவட்டத்தில் மேட்டூர், திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.
 
hydroelectricpowerstation45602371920.jpg
நீர்மின் நிலையங்கள்
 
நீர்மின் நிலையங்களில் அணைக் கட்டிலிருந்து பாயும் நீரால் டர்பைன் சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது. இங்கு இயக்க ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது. நீர்மின் நிலையங்கள் அதிக காலம் இயங்கக்கூடியவை மற்றும் சிக்கனமானவை.
 
3. அணுமின் நிலையங்கள்
 
 அணுமின் நிலையங்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்பாக்கம், திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளம், ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.
 
EnnoreThermalPowerPlant.jpg
அணுமின் நிலையங்கள்
  
அணுமின் நிலையங்களில் அணுக்கரு ஆற்றலைக் கொண்டு, நீரானது கொதிக்க வைக்கப்படுகிறது. இதனால் உருவாகும் நீராவியைக் கொண்டு டர்பைன் இயக்கப்படுகிறது. டர்பைனின் இயக்கத்தால் மின்சாரம் உருவாக்கப்படுகிறது. இங்கு, அணுக்கரு ஆற்றலானது இயக்க ஆற்றலாகவும் பின் மின்னாற்றலாகவும் மாற்றப்படுகிறது.
 
4. காற்றாலை நிலையங்கள்
 
காற்றாலைகள், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் கயத்தாறு, ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. 
 
AWindturbinenearKanyakumari.jpg
காற்றாலை நிலையங்கள்
  
காற்றாலைகளில், காற்றின் ஆற்றலால் டர்பைன் சுழற்றப்படுகிறது. இதன்மூலம் மின்சாரம் உருவாகிறது. இங்கு இயக்க ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.
 
இவற்றைத் தவிரப் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சூரியஒளித் தகடுகள் மூலமும் பரவலாக மின்சாரம் பெறப்படுகிறது.
Reference:
https://commons.wikimedia.org/wiki/File:Jiangsu_Nantong_power_station.jpg
https://commons.wikimedia.org/wiki/File:Rajasthan_Atomic_Power_Station.jpg