PUMPA - THE SMART LEARNING APP
Helps you to prepare for any school test or exam
Download now on Google Playதரவுகள் பிட் (Bit) என்ற அலகு கொண்டு அளவிடப்படுகிறது. ஒரு பிட் என்பது \(0\) அல்லது \(1\) என்னும் ஈரடிமான எண்கணைக் குறிப்பதாகும்.குறுவட்டில் (\(CD\)) சேமிக்கும் தகவலை வி்ட, \(6\) மடங்கு அதிகமாக \(DVD\) தட்டில் சேமிக்க முடியும்.
கணினியின் வகைகள்:
கணினியானது அவற்றின் அமைப்பு, வடிவம், வேகம், திறன், நினைவகம்,செயல்படும் முறை, பயன்கள், மின்சக்தி தேவை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப்படுகிறது. அவ்வகையில் கணினியை நான்கு வகையாக பிரிக்கலாம். அவைகள் முறையே,
- மீக்கணினி (Super Computer)

- பெருமுகக்கணினி (Mainframe Computer)

- நுண்கணினி அல்லது தனியாள் கணினி (Micro or Personal Computer)

- குறுமுகக்கணினி (Mini Computer)

நுண்கணினி அல்லது தனியாள் கணினி (Micro or Personal Computer) :
நுண்கணினி (Micro Computer) என்றழைக்கப்பட்ட கணினியையே தற்போது தனியாள் கணினி என்று அழைக்கின்றோம். இக்கணினியைப் பயன்படுத்துவதற்கு எளிதாக (user friendly) இருப்பதால், பயனாளர்கள் மிகுதியாகப் பயன்படுத்துகின்றனர்.
- மேசைக்கணினி (Desktop)
- மடிக்கணினி (Laptop)
- பலகைக் கணினி (வரைப்பட்டிகை) (Tablet)