PUMPA - THE SMART LEARNING APP
Helps you to prepare for any school test or exam
Download now on Google Playஇணைப்புவடம் பல்வேறு அளவுகளில் காணப்படுவதோடு, ஒவ்வோர் இணைப்புவடமும் தனிப்பட்ட பயன்பாட்டைக் கொண்டுள்ளன. அவற்றின் பெயர்களையும் பயன்பாட்டையும் இனிக் காண்போம்.
இணைப்புவடங்களின் வகைகள்:
1. காணொளிப் பட வரிசை ( VGA):

- இந்த இணைப்புவடம், கணினியின் மையச் செயலகத்தைத் திரையுடன் இணைக்க பயன்படும்.
2. மிகுதிறன் பல்லூடக இடைமுகப்பு (HDMI)

- உயர் வரையறை வீடியோ, டிஜிட்டல் ஆடியோ ஆகியவற்றை ஒரே கேபிள் வழியாக எல்.இ.டி. தொலைக்காட்சிகள், ஒளிவீழ்த்தி (projector), கணினித் திரை ஆகியவற்றை கணினியுடன் இணைக்க \(HDMI\)பயன்படுகிறது.
பொதுவரிசை இணைப்பு (USB):

- அச்சுப்பொறி (printer), வருடி (scanner), விரலி (pen drive), சுட்டி (mouse), விசைப்பலகை (keyboard), இணையப்படக்கருவி (web camera), திறன்பேசி (smart phone), போன்றவற்றைக் கணினியுடன் இணைக்கப் பயன்படும்.
தரவுக்கம்பி (Data cable) :

- கணினியின் மையச் செயலகத்துடன் கைப்பேசி, கையடக்கக் கணினி (Tablet) ஆகியவற்றை இணைக்க, தரவுக் கம்பி பயன்படுகிறது.
ஒலி வடம் (Audio Cable) :

- கணினியை ஒலி பெருக்கியுடன் இணைக்க ஒலி வடம் பயன்படும்
மின் இணைப்புக் கம்பி (Power cord):

- மையச்செயலகம், கணினித்திரை, ஒலி பெருக்கி, வருடி ஆகியவற்றிற்கு மின் இணைப்பை வழங்கப்படும்.

- ஒலிவாங்கியை மையச்செயலகத்துடன் இணைப்பதற்கு ஒலி வாங்கி இணைப்புவடம் உதவுகிறது.
ஈதர் வலை இணைப்புக்கம்பி (Ethernet cable):

- கணினியு்டன் இணைவழித் தொடர்பை ஏற்படுத்த ஈதர் வலை (Ethernet)பயன்படுகிறது.
Reference:
https://commons.wikimedia.org/wiki/File:A-B_Usb_Cable.jpg
https://commons.wikimedia.org/wiki/File:USB_port.jpg
https://commons.wikimedia.org/wiki/File:HDMI_Cable.JPG
https://commons.wikimedia.org/wiki/File:USB_port.jpg
https://commons.wikimedia.org/wiki/File:HDMI_Cable.JPG
https://pxhere.com/en/photo/670244
https://pxhere.com/en/photo/869615
https://pxhere.com/en/photo/817049
https://pixnio.com/objects/electronics-devices/computer-components-pictures/power-cord-computer-component-wire
https://commons.wikimedia.org/wiki/File:Xlr-connectors.jpg
https://commons.wikimedia.org/wiki/File:Category_5e_ethernet_cable.jpg
https://pxhere.com/en/photo/869615
https://pxhere.com/en/photo/817049
https://pixnio.com/objects/electronics-devices/computer-components-pictures/power-cord-computer-component-wire
https://commons.wikimedia.org/wiki/File:Xlr-connectors.jpg
https://commons.wikimedia.org/wiki/File:Category_5e_ethernet_cable.jpg