PUMPA - THE SMART LEARNING APP
Take a 10 minutes test to understand your learning levels and get personalised training plan!
Download now on Google Playநமது வீட்டில் மின் விளக்கு மற்றும் மின்விசிறிகள் வேலை செய்வதற்கான மின்சாரத்தைப் பெறுவதற்கு மின்சார கம்பிகள் மூலம் இணைக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.

இணைப்புகம்பிகள்
இதேபோல், இணைப்புவடம் எனப்படும் கேபிள்கள் மூலம் கணினிகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. கணினிகள் ஒரு அமைப்பாகக் கருதப்படுகின்றன, ஏனெனில் இதர மின்சாதன பொருள்கள் போல் அன்றி, கணினியானது பல பாகங்களாக இருப்பதனால் ஒன்றோடு ஒன்று இணைக்கப்படும் போது ஒரு முழுமையான இயங்கு நிலைக்குக் கொண்டு வரப்படும். இவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுவதாலேயே, கணினியை ஆங்கிலத்தில் சிஸ்டம் (System) என்று அழைக்கிறோம்.

கம்பியில்லா இணைப்பு
கம்பியில்லா இணைப்பு என்பது ஒரு இடத்திலிருந்து (மூலத்திலிருந்து) மற்றொரு இடத்திற்கு (ரிசீவர்) தொலைவில் உள்ள தகவல் பரிமாற்றம் ஆகும்.
இது கம்பிகள் அல்லது கேபிள்கள் போன்ற எந்த இயற்பியல் ஊடகத்தையும் பயன்படுத்தாமல் ஒரு புள்ளியில் இருந்து மற்றொரு இடத்திற்கு தகவல்களை அனுப்பும் முறையாகும்.
- ஊடலை
- அருகலை
1. ஊடலை (Bluetooth):
ஊடலை என்பது கம்பியில்லா இணைப்பு தொழில்நுட்பமாகும், இது வெவ்வேறு சாதனங்களுக்கு இடையில் தரவைப் பரிமாறிக்கொள்ள பயன்படுகிறது. ஊடலைப் பயன்படுத்தி, அருகிலுள்ள சாதனங்களுடன் தரவைப் பகிரலாம். தகவல்களை அனுப்ப அலைநீளத்தைப் பயன்படுத்துவதால், குறுகிய தூரத்திற்குள் தரவைப் பகிர இது பயன்படுத்தப்படலாம்.
Example:
போர்டை ஊடலை மூலம் கணினியுடன் இணைக்க முடியும்.
2. அருகலை ( Wi-Fi ) :

Wi-Fi என்பது Wireless Fidelityசுருக்கமான பெயர். கணினிகள் மற்றும் பிற சாதனங்கள் கம்பியில்லாமல் சிக்னல் மூலம் தொடர்பு கொள்ள அனுமதிக்கும் அருகலையைப் பயன்படுத்தி எங்கிருந்தும் எந்தத் தரவையும் பகிரலாம்.
Reference:
https://commons.wikimedia.org/wiki/File:VGA_Cable.JPG
https://www.stockvault.net/photo/145389/vga-cables
https://www.stockvault.net/photo/145389/vga-cables