PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo5. உரமாக மாற்றுதல்
நுண்ணுயிரிகளின் செயல்பாடுகள் மூலம் மக்கும் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் நிகழ்வு உரமாதல் எனப்படும். இவ்வாறு மக்கும் குப்பைகளிலிருந்து கிடைக்கும் உரம் தாவரங்களுக்கு இயற்கை உரமாகப் பயன்பட்டு மண்வளத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.
இயற்கை உரம்
6. எரித்துச் சாம்பலாக்குதல்
தேவையில்லை என்று வெளியே போடு கழிவுப்பொருள்களில் எரியக் கூடிய திடக்கழிவுகளை பிரித்து அதற்கென தொழில்நுட்பத்தின் வழியாக வடிவமைக்கப்பட்ட எரியூட்டி (உலைகள்) மூலம் எரித்துச் சாம்பலாக மாற்றலாம். எரிக்கபடும் போது வெளிப்படும் அதிக வெப்பம் நோய் தொற்றுக் கிருமிகளை அழிக்க உதவுகிறது. மேலும் இந்த வெப்பத்தினைப் பயன்படுத்தி மின்சாரமும் உற்பத்தி செய்யலாம்.
Example:
மனித உடல் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் (தூக்கி எறியப்படும் மருந்துகள், நச்சுத் தன்மை கொண்ட மருந்துகள், இரத்தம், சீழ்).
எரியூட்டி
7. நிலத்தில் நிரப்புதல்
இயற்கையாக நிலத்தில் உள்ள குழிகள் அல்லது மனிதன் செயல்பாடு மூலம் வெட்டப்படும் பள்ளங்களில் தேவையில்லாத கழிவுகளை நிரப்பி அதற்கு மேலாக மண்ணை நிரப்பும் முறைக்கு நிலத்தில் நிரப்புதல் எனப்படும். இதில் காணப்படும் மட்கும் கழிவுகள் சில நாட்களுக்குப் பிறகு மெல்ல சிதைவுற்று உரமாக மாறிவிடும். இவ்வகை நிலத்தில் பூங்காக்கள், தோட்டங்கள் போன்றவற்றை உருவாக்கலாம்.
நிலத்தில் நிரப்புதல்
படைப்பாக்க மறுபயன்பாடு
படைப்பாக்க மறுபயன்பாடு அல்லது உயர்சுழற்சி என்பது தேவையில்லாத கழிவுப்பொருள்கள் அல்லது பயன்படாத பொருள்களை, உயர்தரமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு தகுந்த பொருள்களாக மாற்றப்பட்டு பயன்படுத்துவது ஆகும். நாம் ஒரு பொருளை உயர்சுழற்சி முறைக்கு மாற்றப்படும் போது அதற்கு நாம் வேறு விதமான பயன்பாட்டினைக்
கொடுக்கிறோம்.
Example:
- பயன்படுத்திய டயர்களை அமரும் நாற்காலியாக மாற்றுதல்.
- பயன்படுத்திய நெகிழிப்பாட்டில்களை பேனா தாங்கியாக மாற்றிப் பயன்படுத்துதல்.
உயர்சுழற்சி