PDF chapter test TRY NOW
ராணியும் அவளது குப்பைகளும்!
ராணி, பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்ததும் அவளுக்கு பசி எடுத்தது அதனால் வீட்டில் இருந்த வாழைப்பழத்தையும், சிப்ஸ்சையும் சாப்பிடுகிறாள். அவள் சாப்பிட்டு முடித்த பின் வாழைப் பழத்தோலையும், சிப்ஸ்சை அடைத்து வைத்த நெகிழிப்பையையும் குப்பைத் தொட்டியில் போடுகிறாள். குப்பைத் தொட்டியில் உள்ள நெகிழியோடு வாழைப்பழத்தோலும் சேர்ந்து அழுகி துர்நாற்றம் அடித்தது. ராணியின் தாய் குப்பையை திறந்த வெளியில் கொட்டினார். பின் அங்கு வந்த நகராட்சி குப்பை வண்டியின் மூலம் அனைத்து வீட்டின் குப்பைகளையும் எடுத்துச் செல்லப்பட்டு பிறகு திறந்த வெளியில் கொட்டப்படுகிறது.
பின் திறந்த வெளியில் கொட்டப்பட்ட குப்பைகளை தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதன் மூலம் வெளியிடப்படும் புகை உயிரினங்களின் உடல்நலத்தை கெடுக்கக்கூடிய வேதிப்பொருள்கள் சூழ்நிலை மண்டலத்தை மாசுப்படுத்துகிறது. இந்த நச்சுப்பொருள்கள் உள்ள காற்றையே அனைத்து உயிரினங்களும் சுவாசிக்கிறது. குப்பைகள் எரியும் போது உருவாகும் சாம்பல் அதில் உள்ள நச்சும் மண்ணை மாசுபடுத்துகிறது. மேலும் மழை பெய்யும் போது சில ஆபத்தான வேதிப்பொருள்கள் நிலத்தை அடையும்.
குப்பையில் போடப்படும் நெகிழிப்பைகள் மழைநீரை நிலத்திற்கடியில் போகவிடாமல் தடுக்கிறது. மேலும் சிறிய குட்டைகள் காணப்படும் நீரில் கொசுக்கள் உருவாகி டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்களை உருவாக்குகிறது. பசுக்களும், நாய்களும் உணவுக்காக குப்பைக்குழிக்குச் செல்கிறது. குப்பைகளில் காணப்படும் நெகிழிப்பைகள் உணவு வாசனையைத் தரும் இதனால் விலங்குகள் குழப்பம் ஏற்பட்டு நெகிழிப்பைகளை உண்ணுகிறது. இதனால் விலங்களும் நோய் ஏற்படுகிறது.
ராணி அழகான ஊரை மாசுபடுத்தவும், விலங்குகள் நோய் வாய்ப்படுவதையும், கொசுக்கள் உருவாகி அதன் மூலம் மனிதர்கள் நோய் வாய்ப்படுவதையும் ராணிக்குப் பிடிக்கவில்லை. அதனால் ராணி “உரிய முறையில் கழிவுகளைக் கையாள்வேன்” இதனால் பலவிதமான மாசுக்களையும் கட்டுப்படுத்த முடியும் என்று முடிவெடுத்தாள்.
நீங்களும் ராணி போல் இருக்க விரும்பினால் இப்பகுதியில் கழிவுகள் பற்றியும், 3R மூலம் கழிவுகளை எவ்வாறு கையாண்டு சுகாதாரப் பிரச்சனைகளைத் தீர்க்கலாம் என்பதையும் தெரிந்து கொள்வோம்.
திடக்கழிவு மேலாண்மை
ஒவ்வொரு மனிதனின் கடமை என்பது தேவையில்லாமல் கழிவுகள் உருவாதலைக் குறைக்க வேண்டும் மேலும் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பதாகும்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முக்கிய மூன்று வழிமுறைகள் (3R), அவை:
- பயன்பாட்டைக் குறைத்தல் (Reduce)
- மீண்டும் பயன்படுத்துதல் (Reuse)
- மறுசுழற்சி செய்தல் (Recycle)
3R சுழற்சி
1. தவிர்த்தல்
நாம் வாங்கும் பொருள்கள் அனைத்தும் பயனுள்ளதா என்று யோசித்து வாங்க வேண்டும். தேவையில்லாத பொருள்களையும், அதிகம் கழிவுகளை தரும் பொருள்களையும் பயன்படுத்துதலையும், வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.
Example:
பாக்கெட்டுகளில் கொடுக்கப்பட்ட உணவு வகைகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப்பொருள்களை வாங்க மறுக்க வேண்டும்.
2. பயன்பாட்டைக் குறைத்தல்
அதிகமான கழிவுகளை உண்டாக்கும் எந்தப் பொருள்களையும் உபயோகிக்காமல் நீண்ட காலத்திற்குத் தேவைப்படும் தரமான பொருள்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றைத் தேவைகேற்ப உபயோகிப்பதன் வழியாக கழிவுகளைக் குறைக்க முடியும்.
Example:
காகிதத்தாளின் இருபுறமும் எழுத பயன்படுத்தல், தேவையில்லாமல் அச்சிடுதலைக் குறைத்தல், கணினி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், செய்தித்தாள்கள், வார இதழ்கள் மற்றும் வாய்ப்புள்ள மற்ற பொருள்களை மற்றவருடன் பகிர்ந்து பயன்படுத்துதல் வேண்டும்.
3. மீண்டும் பயன்படுத்துதல்
ஒரு முறை உபயோகப்படுத்தி பின் குப்பையாக போகும் பொருள்களுக்குப் பதிலாக மீண்டும் மீண்டும் உபயோகப்படும் பொருள்களைப் பயன்படுத்துதலே மீண்டும் பயன்படுத்துதல் ஆகும்.
Example:
ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்தக்கூடிய நெகிழிப்பைகள் பதிலாக துணிப்பைகள், பேனாக்கள் பதிலாக மைநிரப்பும் பேனாக்கள், மின்கலன்களுக்குப் பதிலாக மின்னேற்றம் செய்து உபயோகபடுத்தக் கூடிய மின்கலன்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துதல், காலணிகளில் பழுது ஏற்பட்டால் மீண்டும் சரி செய்து பயன்படுத்துதல் வேண்டும்.
4. மறுசுழற்சி
தேவையில்லாத வெளியே அனுப்பப்படும் கழிவுகளிலிருந்து தேவைப்படும் பொருள்களைப் பிரித்தெடுத்து மீண்டும் உபயோகப்படுத்துவது மறுசுழற்சி என்று பெயர்.
Example:
பயன்படுத்திய பழைய துணிகளை காகிதத் உற்பத்தியில் பயன்படுத்துதல். நெகிழிகளை உருக்கி நடைபாதை விரிப்புகள், நெகிழி அட்டைகள், நீர்பாய்ச்சும் குழாய்கள் போன்றவை தயாரித்தல் வேண்டும்.
மறுசுழற்சி