PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நமக்கு தேவையான மரக்கட்டைகள் தாவரங்களில் இருந்து கிடைக்கிறது. இதுவே மரக்கட்டைதரும் தாவரங்கள் என அழைக்கப்படும். இவை வீடு கட்டுவதற்கு, மரப்பொருள்கள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. மரக்கட்டை என்பவை தாவரத்தின் காய்ந்த தண்டுப் பகுதியாகும்.
 
TimberstacksonBeechenLaneNewForestgeographorguk210787.jpg
மரக்கட்டைகள்
 
மரக்கட்டைகளின் பண்புகள்
  • கடினத்தன்மை
  • நீடித்து உழைக்கும்
  • அழகு 
  • வெப்பத்தினைத் தாங்கும் திறன் 
  • குறைந்த ஈரப்பதம்
  • வலிமை
  • பயன்பாட்டிற்கு ஏற்ப அமைப்பு
பொருளாதார ரீதியாக பயன்படுத்தப்படும் மரக்கட்டைகள் அதன் வலிமை மற்றும் அடர்த்தியின் அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை
  1. வன்கட்டைகள்
  2. மென்கட்டைகள்
1. வன்கட்டைகள்
 
பூக்கும் தாவரங்கள் என்று அழைக்கப்படும் ஆஞ்சியோஸ்பெர்ம் தாவர வகைகளிலிருந்து  வன்கட்டைகள் பெறப்படுகின்றன. இதிலிருந்து உயர்தர மரச்சாமான்கள், நாற்காலிகள், மேற்கூரைகள் மற்றும் மரக்கட்டுமானங்கள் ஆகியவை தயாரிக்கப் பயன்படுகிறது.
Example:
தேக்கு, பலா
BeFunkycollage13.png
தேக்கு
 
2. மென்கட்டைகள்
 
பூவாத்தாவரங்கள் என்று அழைக்கப்படும் ஜிம்னோஸ்பெர்ம் வகை தாவரங்களில் இருந்து மென்கட்டைகள் பெறப்படுகின்றன. ஒரு சில ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களிலிருந்து  மென்கட்டைகள் கிடைக்கின்றன. இதிலிருந்து பொதுவாக ஒட்டுப்பலகைகள், மரப்பெட்டிகள், நடுத்தரமான அடர்த்தி கொண்ட பலகைகள் மற்றும் தாள்கள் (காகிதம்) உற்பத்திக்கு பயன்படுகிறது.
Example:
கடம்பு, பைன்
BeFunkycollage14.png
பைன்
 
Important!
மரக்கட்டைகளை மெல்லியதாகச் சீவி எடுக்கப்படும் மரத்தகடுகளை ஒன்றின் மீது ஒன்றாக ஒட்டி அடுக்கடுக்காக உருவாக்கப்படுவது ஒட்டுப்பலகை (Plywood) ஆகும். இது ஒருவகைக் கூட்டு மரப்பலகை (composite wood) எனவும் அழைக்கப்படும்.
gettingaround6617981280.jpg
ஒட்டுப்பலகை
Reference:
https://upload.wikimedia.org/wikipedia/commons/d/da/Timber_stacks_on_Beechen_Lane%2C_New_Forest_-_geograph.org.uk_-_210787.jpg