PDF chapter test TRY NOW

ஒரு குறிப்பிட்ட தாவரங்களில் இருந்து நமக்குத் தேவையான நார்கள் கிடைக்கிறது. அவை நார் தரும் தாவரங்கள் என அழைக்கப்படும். இவை நூல், கயிறு, துணி மற்றும் காகிதம் போன்றவை உற்பத்தி செய்ய பயன்படுகிறது. இத்தகைய நார்கள் இயற்கை நார்கள் எனப்படும்.
நார் தரும் தாவரங்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்:
  1. நார் பயன்பாட்டின் அடிப்படையில்
  2. நார் கிடைக்கிறது என்ற அடிப்படையில்
1. பயன்பாட்டின் அடிப்படையில்
 
i. நெசவு நார்கள் என்பது துணிகள் உற்பத்தி செய்ய உதவும் நார்கள் ஆகும்.
Example:
பருத்தி  
cotton187782960720jpg.jpg
பருத்தி
  
ii. கயிறு நார்கள் என்பது கயிறு தயாரிக்க உதவும் நார்கள் ஆகும்.
Example:
தென்னை  
hemp47547071280.jpg
தென்னை
 
iii. நிரப்பும் நார்கள் என்பது மெத்தைகள் செய்ய உதவும் நார்கள் ஆகும்.
Example:
இலவம் பஞ்சு   
handspinning483x272w482.jpg
இலவம் பஞ்சு
  
2. கிடைக்கப்பெறும் தாவர பாகங்களின் அடிப்படையில்
 
i. விதைகளின் மேற்புறத்தூவி நார்கள். எ.கா: பருத்தி
ii. உரிமட்டை நார்கள். எ.கா: தேங்காய்
iii. தண்டு அல்லது தண்டிழை நார்கள். எ.கா: ஆளி, சணல்
  
BeFunkycollage11.png
ஆளி, சணல்
 
iv. இலை நார்கள். எ.கா: கற்றாழை
  
BeFunkycollage12.png
கற்றாழை
  
Important!
இந்தியா தோராயமாக \(1,62,000\) டன் சணலை இறக்குமதி செய்கிறது. உலகின் மொத்த சணல் உற்பத்தியில் \(55.1%\) இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது அதாவது வருடத்திற்கு \(19,10,000\) டன் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் சணல் அதிகமாக பயிரிடப்படும்  மாநிலங்கள் மேற்கு வங்காளம், அஸ்ஸாம், ஒடிசா, பீகார், உத்திரப்பிரதேசம், திரிபுரா மற்றும் மேகாலயா ஆகிய ஏழு மாநிலங்களாகும். இந்தியவில் மேற்கு வங்காளம் மட்டுமே சணல் உற்பத்தியில் \(50%\) உற்பத்தி செய்கிறது.
Reference:
https://www.flickr.com/photos/vilseskogen/9753565055/
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3d/Flax_fibers_J1.jpg/512px-Flax_fibers_J1.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/5/54/Golden_Fiber_of_The_Jute.jpg
https://www.flickr.com/photos/squaretan/219198252