PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
உறைபனி மிகுந்த இடங்களில் வாழ்வோர் எந்த வகை உடைகளை அணிவார்கள் என்பது தெரியுமா? ஏன் அவர்கள் அவ்வகை உடைகளை விரும்பி அணிகிறார்கள்?
 
உறைபனி மிகுந்த இடங்களில் வாழ்வோர் கம்பளியால் ஆனா உடையை அணிய விரும்புவார்கள் இது உடலுக்கு வெதுவெதுப்பான உணர்வை கொடுக்கும்.
 
கம்பளி இழை கேப்ரி்னோ என்ற குடும்பத்தை சேர்ந்த விலங்குகளின் உடலில் வெளிப்புறத் தோலில் இருந்து பெறப்படும் மென்மையான உரோமம் கற்றையாகும். இந்த உரோமம் பொதுவாக ஆடுகளிலிருந்து கிடைக்கிறது.
Example:
ஆடு, செம்மறி ஆடு, முயல், காட்டெருமை.
கம்பளியைப் பெற ஐந்து நிலைகள் உள்ளன. அவை:
  1. கத்தரித்தல் (Shearing)
  2. தரம் பிரித்தல் (Grading or sorting)
  3. கழுவுதல் (Washing or Scouting)
  4. சிக்கெடுத்தல் (Carding)
  5. நூற்றல் (Spinning)
FotoJet11w1920.png
கம்பளி உருவாக்கும் முறைகள்
 
1. கத்தரித்தல்: ஆடுகளின் உடலின் வெளிப்புற தோலில் உள்ள உரோமங்களை கத்தரித்து சதைப் பகுதிகளிலிருந்து பிரித்து எடுக்கப்படும் முறைக்கு கத்தரித்தல் எனப்படும்.
 
2. தரம் பிரித்தல்: ஒரே ஆட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் பிரித்து எடுக்கப்படும் உரோமங்களை தனித்தனியாக வைக்கப்படும் முறைக்கு தரம் பிரித்தல் எனப்படும்.
 
3. கழுவுதல்: தோலிலிருந்து பிரித்து எடுத்த உரோமங்களில் உள்ள தூசி, அழுக்கு மற்றும் எண்ணெய் பிசின் ஆகியவற்றை போக்க, அவைச் சலவைத்தூள் கொண்டு நன்கு சுத்தப்படுத்தப்படுகிறது.
 
4. சிக்கெடுத்தல்: சுத்தப்படுத்திய கம்பளி இழைகளை காய வைத்து பின் கவனத்துடன் தனித்தனியாகப் பிரித்து ஆலைகளில் காணப்படும் உருளைகள் வழியாக செலுத்த மெல்லிய சிறிய கம்பி போன்று கம்பளி இழையைத் தட்டையான தாளாக மாற்றுவது வலை எனப்படும்.
 
5. நூற்றல்: இவ்வாறாக மாற்றப்பட்ட வலையை சிறிய தனித்தனி இழையாக மாற்ற நூற்பு இயந்திரங்களில் செலுத்தி நூல் போன்று உருண்டையாக மாற்றப்படுகிறது. இந்த நூல் உருண்டை பின்னல்களாக மாற்றப்பட்டு ஆடைகள் உற்பத்தி செய்ய உதவுகிறது.
 
கம்பளியின் சிறப்பம்சங்கள்:
  • வெப்பத்தையும் தண்ணீரையும் தாங்கும் தன்மை கொண்டது.
  • எளிதில் கிழிவதில்லை.
  • ஈரப்பதத்தை எளிதில் ஈர்க்கும் தன்மை கொண்டது.
  • குளிருக்கு வெதுவெதுப்பா இருக்கும். எனவே, கம்பளி சிறந்த வெப்பக் கடத்தியாகக் செயல்படுகிறது.
  • எளிதில் சுருங்காது.
கம்பளியின் பயன்கள்:
 
i. கம்பளி இழை பல வகையான ஆடைகள் தயாரிக்க பயன்படுகிறது.
Example:
விட்டம் ஆடைகள், வீட்டிற்குத் தேவையான துணிகள் மற்றும் தொழிற்சாலைக்குத் தேவையான பொருள்கள்.
ii. மூன்றில் இரண்டு பங்கு கம்பளி இழைகள் சேர்த்து சில வகையான ஆடைகள் தயாரிக்கப்படுகிறது.
Example:
ஸ்வெட்டர், உடுத்தும் ஆடைகள், கோட் மற்றும் விளையாட்டு வீரர்கள் அணியும் ஆடைகள்.
iii. கம்பளி இழை மற்றும் இயற்கை அல்லது செயற்கை இழைகளோடு சேர்த்து சில வகையான  ஆடைகள் தயாரிக்கப்படுகிறது.
Example:
மடிப்புக்கு எதிர்ப்புத் தன்மை உடைய போர்வைகள் மற்றும் சத்ததை ஈர்க்கும் விரிப்புகள்.
Reference:
https://www.maxpixel.net/Sheeps-Wool-Shearing-Sheep-Shearing-Wool-Sheep-1562779
https://www.flickr.com/photos/hwmobs/46586694615
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/35/CSIRO_ScienceImage_2911_Carding_Wool.jpg/512px-CSIRO_ScienceImage_2911_Carding_Wool.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/90/CSIRO_ScienceImage_2801_Wool_Scouring.jpg/512px-CSIRO_ScienceImage_2801_Wool_Scouring.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8f/Wool_Spinning_Jenny_Helmshore_6156.JPG/512px-Wool_Spinning_Jenny_Helmshore_6156.JPG
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7f/CSIRO_ScienceImage_2966_Wool_Fibre_Ready_for_Dyeing.jpg/512px-CSIRO_ScienceImage_2966_Wool_Fibre_Ready_for_Dyeing.jpg
https://www.publicdomainpictures.net/pictures/210000/velka/textile-industry-1487233203jPA.jpg