PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நீங்கள் எப்போதாவது திருமண விழாவிற்குச் சென்றிருக்கிறீர்களா? அதில் மணமகனும், மணமகளும் எந்த ஆடையை உடுத்துவார்கள்? அந்த உடைகள் எவற்றால் ஆனவை?
 
திருமண விழாவில் மணமகனும், மணமகளும் பட்டால் தயாரித்த உடைகளை உடுத்துவார்கள்.
பட்டு என்பது பட்டுப் பூச்சி தன் சுரப்பிகளின் மூலம் ஒரு கூட்டை உருவாக்குகிறது.மேலும் பட்டுப்புழுக்கள் மல்பெரி இலைகளை உணவாக உட்கொண்டு பட்டு இழைகள் உற்பத்தி செய்கிறது. இதன் ஆயுட்காலம் இரண்டு மாதங்கள் மட்டுமே ஆகும்.
இந்த இரண்டு மாதங்களில் பட்டுப் பூச்சி நான்கு நிலையில் வளர்ச்சியடைகிறது. அவை:
  • முட்டை
  • லார்வா நிலை (கம்பளிப்பூச்சி)
  • கூட்டுப்புழு (குக்கூன்)
  • பட்டுப் பூச்சி
பட்டுப் பூச்சியின் வாழ்க்கை சுழற்சி
பட்டுப்பூச்சி வளர்ப்பு அல்லது செரிகல்சர் என்பது பட்டுப்பூச்சிகளை வளர்த்து அதிலிருந்து பட்டு நுல்களை உற்பத்தி செய்யும் முறையாகும்.
ஒரு வயது முதிர்ந்த பெண் பட்டுப் பூச்சி சுமார் \(500\) முட்டைகளை இடுகிறது. இதன் முட்டைகளை குளிர் வெப்பநிலையில் ஆறு வாரங்கள் வைத்திருக்க வேண்டும். பின் பத்து நாள்கள் அடைகாக்கும் பெட்டியில் (இன்குபேட்டர்) முட்டைகளை பாதுகாத்து வைத்த பின் முட்டைகள் பொரிந்து லார்வாக்களாக வெளிவருகிறது.
 
இவை மல்பெரி இலைகளை \(35\) நாட்கள் உணவாக உட்கொண்டு வாழும். இதன் பிறகு ஐந்து நாட்களில் பட்டுப்புழு பட்டு இழைகளை தயார் செய்கிறது. மேலும் இவை கூட்டுப் புழுக்களாக மாறி தனித்த நீண்ட பட்டுக்கூடு இழையாக காணப்படும்.
 
6.png
பட்டுப் பூச்சியின் வாழ்க்கை சுழற்சி
  
பின்னர் கொதிக்கும் நீரில் கூட்டுப்புழுக்களைப் போட்டால், அதிலிருந்து மிக எளிதாக பட்டுஇழைகள் பிரிக்கப்படுகிறது ஆனால் கூட்டுப்புழு பட்டு இழைகளை உருவாக்கட்டும் என்று விட்டு விட்டால் அது வெளியே வரும் போது நீண்ட பட்டு இழைகள் கிழியும். இதை தடுப்பதற்காகத் தான் கொதிக்கும் நீரில் கூட்டுப்புழுக்களைக் போட்டு, பட்டு நூலை மிக நீளமான எடுத்து அதைச் சுத்தம் செய்து, நிறமேற்றி ஆடையாக உற்பத்தி செய்கிறார்கள்.
 
FotoJet13.png
பட்டுப்பூச்சி வளர்ப்பு
  
பட்டின் சிறப்பம்சங்கள்:
  • பட்டு ஈர்க்கும் வண்ணமாகவும், மிகவும் மென்மையானதாகவும் அணிவதற்கு எளிதாகவும் பல துறைகளில் பயன்படக்கூடியது.
  • பட்டை எளிதில் நிறமேற்றலாம்.
  • பட்டு இழை இயற்கை இழைகளிலே வலிமையான இழையாகும்.
  • சூரிய ஒளியை எளிதில் உள்வாங்கும்.
பட்டின் பயன்கள்:
 
பட்டு இயற்கையிலே அழகானது, கோடை காலத்தில் அணிவதற்கு இதமானதாகவும், குளிர் காலத்தில் வெதுவெதுப்பை கொடுக்க கூடியதாக உள்ளது. நாகரிகமான அழகான நவீன ஆடைகளை உற்பத்தி செய்யவும், பட்டு சிறந்த அழகிய பட்டாடைகள், பட்டு புடவைகள் தயாரிக்கப் பயன்படுகிறது. வீடுகளில் பயன்படும் பொருள்களான சுவர் அலங்காரப் பொருள்கள், திரைச் சீலைகள், கம்பளம் மற்றும் இதர விரிப்புகள் உற்பத்தி செய்யப் பயன்படுகிறது. மருத்துவத் துறையில் பட்டு இழை அறுவை சிகிச்சையின் போது தையல் நூலாகப் பயன்படுத்தப்படுகிறது.
 
Important!
பட்டுத் தொழில்நுட்பம் கி.மு. \(1\) ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு அறிமுகமானதாகச் சொல்லப்படுகிறது. உலகிலேயே பட்டு உற்பத்தியில் சீனா முதல் இடத்திலும், இந்தியா  இரண்டாவது இடத்திலும் உள்ளது. தாய்லாந்து, ஜப்பான், கொரியா, வியட்னாம், ஈரான், உஸ்பெஸ்கிதான் என \(30\) க்கும் மேற்பட்ட நாடுகள் குறிப்பிடத்தகுந்த வகையில் பட்டு உற்பத்தி செய்கின்றன. தமிழ்நாட்டில் பட்டு உற்பத்தியில் காஞ்சிபுரம், திருபுவனம் மற்றும் ஆரணி போன்ற இடங்கள் புகழ் பெற்றவையாகும்.
Reference:
https://www.flickr.com/photos/danielmennerich/38050576945
https://www.flickr.com/photos/danielmennerich/39948913595
https://www.flickr.com/photos/danielmennerich/39935428301/in/photolist-21jbzvQ-23S9Cdk-25m6nKc-23QXvvg-ZYp9S6 EqfEYc/flickr.com/photos/danielmennerich/25216015747/in/photolist-21jbzvQ-23S9Cdk-25m6nKc-23QXvvg-ZYp9S6-EqfEYc/
https://www.pxfuel.com/en/free-photo-odtfk/download
https://www.maxpixel.net/Silkworm-Summer-Share-In-Who-In-The-Powder-Mulberry-3576503
https://www.pxfuel.com/en/free-photo-exwlu/download
https://www.pxfuel.com/en/free-photo-oriia/download
https://commons.wikimedia.org/wiki/File:Bombyx_mori_01.jpg