PDF chapter test TRY NOW

பொதுவாக ஆலைகளில் வேலை செய்பவர்களுக்கு தற்செயலாக விபத்துகள் நடக்கும் அதனால் காயங்கள் ஏற்படும் மேலும் ஆலைகளில் சூழ்நிலை காரணமாக அங்கு வேலை செய்பவர்களுக்கு உடல் நிலையில் சில பாதிப்புகள் ஏற்படலாம்.
 
பட்டாலைகளில் ஏற்படும் பாதிப்புகள்:
 
பட்டாலைகளில் வேலை செய்பவர்கள் நின்று கொண்டே பணிபுரிவதால் மூட்டு வலி வருகிற வாய்ப்பு அதிகம் இருக்கும் மேலும் முதுகு வலி மற்றும் பார்வை கோளாறுகள் ஏற்படும். சிலருக்கு ஒவ்வாமையின் காரணமாக தோலில் புண்கள் ஏற்படுகிறது. குறைந்த அளவு காற்றோட்டமுள்ள பகுதிகளில் வேலை செய்வதால் சுவாச பிரச்சனைகளான ஆஸ்துமா மற்றும் மார்புச் சளி போன்ற பாதிப்புகள் வருகிறது.
 
512pxAsthmaLungs.png
ஆஸ்துமா
 
Bronchitisw512.png
மார்புச் சளி
 
கம்பளி ஆலைகளில் ஏற்படும் பாதிப்புகள்:
  • கம்பளி ஆலைகளில் பணிபுரிபவர்கள் பல நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள்கள் மற்றும் சலவைத்தூள்களை பயன்படுத்துவதால் ஒவ்வாமை காரணமாக தோல் நோய் ஏற்படுகிறது.
  • பணியாளர்கள் இறந்த விலங்குகளை தொடுவதால் ஆந்தராக்ஸ் பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் உயிரிழப்பு ஏற்படுகிறது. இது பிரித்தெடுப்போர்கள் நோய் என்று அழைக்கப்படும்.
  • ஆந்தராக்ஸ் நோய் பேசில்லஸ் ஆந்தராசிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியாவால் பாதிப்பு ஏற்பட்ட விலங்குகளைக் தொடும் போதும் மற்றும் உரோமங்களை பிரிக்கும் போதும் பணியாளர்களுக்கு ஆந்தராக்ஸ் நோய் எற்பட வாய்ப்புள்ளது.
  • ஆந்தராக்ஸ் நோயின் அறிகுறிகள் – காய்ச்சல், இருமல், மூச்சு விடுதலில் சிரமம். இந்த நோய் நிமோனியா காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்படும். சில நேரங்களில் சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கும் ஏற்படும்.
OSCMicrobio2102anthrax.jpg
ஆந்தராக்ஸ்
 
சிகிச்சை
  • பணியாளர்களுக்கு ஆந்த்ராக்ஸ் நோயை சரி செய்ய பெனிசிலின் மற்றும் சிப்ரோஃப்ளோக்சாசின் போன்ற மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது.
  • ஆந்தராக்ஸ் தடுப்பூசி விலங்குகளுக்கு கட்டாயம் போட வேண்டும்.
  • ஆந்த்ராக்ஸ் நோயால் இறந்த விலங்குகளை கவனமாக கையாள வேண்டும்.
  • இந்த நோயால் இறந்த விலங்குகளை ஆழ்குழி தோண்டி புதைக்க வேண்டும் அல்லது எரிக்க வேண்டும்.
  • பணியாளர்களுக்குச் சுத்தமான காற்றோட்டம் உள்ள இடமாக அமைத்து தர வேண்டும் மற்றும் பாதுகாப்பும் தருவது முதலாளிகளின் கடமையாகும்.
Reference:
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5b/Asthma_%28Lungs%29.png/512px-Asthma_%28Lungs%29.png
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1c/Bronchitis.png/512px-Bronchitis.png
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fb/OSC_Microbio_21_02_anthrax.jpg/512px-OSC_Microbio_21_02_anthrax.jpg