PDF chapter test TRY NOW

விரவல்
அதிகச் செறிவுடைய பகுதியிருந்து, குறைந்தச் செறிவுடையப் பகுதிக்கு மூலக்கூறுகள்  (திட, திரவ, வாயு) இடப்பெயர்ச்சி அடைவது விரவல் (அ) பரவல் எனப்படும்.
Design - YC IND (22).png
விரவல்
  
Important!
அறிந்து கொள்வோம்!
  • உணவுப் பொருள்கள் பரவல் மூலம் செரிமான நொதிகளுடன் கலக்கின்றன.
  • நம் சுவாச மண்டலத்தில் வாயுப் பரிமாற்றம் பரவல் மூலம் நடக்கிறது.
Example:
1. எரியும் ஊதுபத்தியின் மணம் அறை முழுவதும் பரவுதல்.
2. தேயிலைத்தூள் பையில் உள்ள தூள் சூடான நீரில் பரவுதல்.
சவ்வூடு பரவல்
அதிகச் செறிவுடைய பகுதியிருந்து, குறைந்தச் செறிவுடையப் பகுதிக்கு திரவ (கரைப்பான்) மூலக்கூறுகள், செல் சவ்வின் மூலம் இடப்பெயர்ச்சி அடைவது சவ்வூடுபரவல் எனப்படும்.
Design - YC IND (36).png
சவ்வூடுபரவல்
 
சவ்வூடுபரவல் மூன்று வகைப்படும். அவற்றைப் பற்றிக் காணலாம்.
  • ஒத்தச் செறிவுக் கரைசல் (isotonic) - செல்லின் உட்புறமும், வெளிப்புறமும் உள்ள கரைசல்களின் செறிவு ஒன்றாக இருக்கும்.
  • குறைச் செறிவுக் கரைசல் (hypotonic) - செல்லின் உட்புறத்தில் உள்ள கரைசலின் செறிவை விட, வெளிபுறக் கரைசலின் செறிவு குறைவாக இருப்பதால், நீரானது, வெளியிலிருந்து, செல்லின் உள்ளே செல்கிறது, இதனால் செல் பெரியதாகிறது.
  • மிகைச் செறிவுக் கரைசல் (hypertonic) - செல்லின் உட்புறத்தில் உள்ள கரைசலின் செறிவை விட, வெளிபுறக் கரைசலின் செறிவு அதிகமாக இருப்பதால், நீரானது, செல்லின் உள்ளிருந்து வெளியே செல்கிறது, இதனால் செல் சுருங்குகிறது.
Design - YC IND (21).png
இரத்த செல்லில் சவ்வூடுபரவல் விளக்கப் படம்
Reference:
https://upload.wikimedia.org/wikipedia/commons/d/dc/Osmotic_pressure_on_blood_cells_diagram-ca.svg