PDF chapter test TRY NOW

ஊடுபரவல் ஒழுங்குபாடு என்பது, உடலில் நீர்ச் சமநிலையைப் பராமரிக்கும் தன்நிலைக்காத்தல் செயல்பாடு ஆகும்.
ஊடுபரவல் ஒழுங்குபாடு (Osmoregulation) எனும் சொல்லை முதன் முதலில் \(1902\) ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியவர், ஹோபர் ஆவார்.
 
ஊடுபரவல் ஒழுங்குபாட்டின் செயல்பாடுகள்
  • நீர் இழப்பு அல்லது நீர் உள் ஈர்ப்பைக் கட்டுபடுத்துதல்
  • திரவ சமநிலையை ஒழுங்குப்படுத்துதல்
  • மின் பகுளின் (electrolyte concentration) செறிவை, ஊடுபரவல் செறிவின் மூலம் பராமரித்தல்
வகைப்பாடு
Design - YC IND (35).png
நன்னீர்வாழ் மற்றும் கடல்வாழ் உயிரினங்களில் ஊடுபரவல் ஒழுங்குபாடு
 
1. ஊடுகலப்பு ஒத்தமைவான்கள் (osmoconformers)
 
சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு, தங்கள் உடலின் உட்புற ஊடுகலப்பு அடர்த்தியை மாற்றிக் கொள்ளும் உயிரினங்கள் ஆகும்.
Example:
முதுகு நாணற்றவை, கடல் வாழ் உயிரினங்கள்
2. ஊடுகலப்பு ஒழுங்கமைவான்கள் (Osmo regulators)
 
தங்களின் உட்புற ஊடுகலப்பு அடர்த்தியை, புறச் சூழல் அடிப்படையை பொறுத்து பாராமரிப்பது இல்லை. புறச் சூழ்நிலை அதிகரித்தாலும் அல்லது குறைந்தாலும், இவ்வகை உயிரினங்கள் தங்களின் உடல் செயலியல் மூலம் உட்புற ஊடுகலப்பு அடர்த்தியை நிலையாக வைத்துக் கொள்கின்றன.
Example:
நன்னீரில் வாழும் உயிரினங்கள்
Reference:
https://upload.wikimedia.org/wikipedia/commons/d/dc/Osmotic_pressure_on_blood_cells_diagram-ca.svg
https://commons.wikimedia.org/wiki/File:Figure_41_01_02ab.jpg