PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
Design - YC IND (11).png
மனித சுவாச மண்டலம்
 
மூச்சுக் கிளைக்குழாய் (Bronchi)
  • மூச்சுக் குழாய், நுரையீரல்கள் உள்ளே இரு கிளைகளாகப் பிரிந்து, மூச்சுக் கிளைக்குழாய்களாக மாறுகின்றன. இவை, மேலும் சிறு சிறு குழாய்களாகப் பிரிந்து நுண் கிளைக்குழல்களாக மாறுகின்றன.
நுரையீரல் (Lungs)
  • நுரையீரல்கள் இரண்டும் மார்பறையில் அமைந்து, வாயுப் பரிமாற்றம் (\(CO_2\), \(O_2\)) செய்யும் உறுப்புகள் ஆகும். இவை இரண்டும், மீளும் தன்மைக் கொண்ட பஞ்சு போன்ற பைகளாகும்.
  • மார்பறையானது, பக்கவாட்டில் விலா எலும்புகளாலும், வயிற்றுப்புறத்தில் மார்பெலும்பாலும், பின்புறத்தில் (முதுகுபுறம்) முதுகெலும்பாலும், அடிப்புறத்தில்உதரவிதனத்தாலும் சூழப்பட்டுள்ளது.
  • மூச்சுக் கிளைக்குழாய், நுரையீலின் உள்ள மேலும் சிறு சிறு பகுதிகளாகப் பிரிந்து, இறுதியில் காற்று நுண்ணறைகளாக மாறுகின்றன.
Important!
இடது நுரையீரல், வலது நுரையீரலை விட சிறியது. ஏனெனில், இடது நுரையீலின் அருகில் இதயம் அமைந்துள்ளது.
காற்று நுண்ணறைகள் (Alveoli)
 
Design - YC IND (12).png
காற்று நுண்ணறைகளில் வாயுப் பரிமாற்றம்
 
இவை, நுண் கிளைகுழலின் இறுதியில் சிறிய பைகள் போன்று காணப்படும். இவற்றின் மூலம், வாயுப் பரிமாற்றம் நிகழ்கிறது.
  
உதரவிதானம்
  • இது ஒரு உட்புறம், மேல்நோக்கி வளைந்த மென்மையான தசைத் திசு ஆகும். மேலும், இது மார்பறையை, வயிற்றுப் பகுதியிலிருந்து பிரிகிறது.