PDF chapter test TRY NOW

மேகத்திலிருந்து சுத்தமான தண்ணீர் மழையாக பொழிகிறது என நாம் அறிவோம். ஆனால் சில நேரங்களில் சல்பர் டை ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் டை ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் வளிமண்டலத்தில் உள்ள நீர் மற்றும் ஆக்‌ஸிஜனுடன் வினைபுரிந்து பூமியின் மீது அமில மழையாக விழுகிறது.
YCIND20220615_3918_Acid Rain-01.png
அமில மழை
 
தூய மழை நீரின் pH மதிப்பு \(5.6\ \)ஆக இருக்கிறது. ஆனால் அமில மழையின் pH மதிப்பு\(\ 5.6\)ஐ விட மிகவும் குறைவாக உள்ளது.
 
அமில மழை உருவாவதற்கான காரணிகள்:
 
அமில மழை இரண்டு காரணங்களால் உருவாகிறது.
 
1. இயற்கையான காரணிகள்
  • அழுகிய தாவரங்கள்
  • எரிமலை வெடிப்பு
2. மனிதனின் செயல்பாடுகள்
  • எரிபொருட்களை எரித்தல்
  • மரங்களை வெட்டுதல்
  • வாகனங்கள் வெளிவிடும் புகை
அமில மழை எவ்வாறு உருவாகிறது?
 
மழைநீர் சிறிதளவு அமிலத்தன்மையுடனேயே இருக்கிறது. எப்போது அது பூமியின் வளிமண்டலத்தினை வந்தடைகிறதோ அப்போது அது கார்பன் டை ஆக்ஸைடுடன் வினை புரிந்து கார்போனிக் அமிலத்தினை உருவாக்குகிறது.
 
அமில மழை எப்போது தரையினை வந்தடைகிறோதோ அப்போது அது பூமியில் உள்ள சல்பர் டை ஆக்ஸைடு அல்லது நைட்ரஸ் ஆக்ஸைடுடன் வினைபுரிந்து சல்பியூரிக் அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலத்தினை உருவாக்குகிறது. இதுவே அமில மழை எனப்படும்.
 
அமில மழையின் விளைவுகள்:
  • மனிதர்களின் கண்கள் மற்றும் தோலில் எரிச்சலை உருவாக்குகிறது.
  • விதை முளைத்தலையும் வளர்தலையும் தடை செய்கிறது.
  • மண்ணின் தன்மையை மாற்றுவதோடு ஏற்கனவே உள்ள தாவரங்களையும் பாதிக்கிறது.
  • கட்டடங்கள் மற்றும் பாலங்களில் அரிப்பினை ஏற்படுத்துகிறது.
அமில மழையினை தடுக்கும் வழிமுறைகள்:
  • கரிம எரிபொருட்களின் பயன்பாடுகளை குறைத்தல்.
  • அழுத்தப்பட்ட இயற்கை வாயுவினை (CNG) பயன்படுத்துதல்.
  • மாற்று எரிபொருளை கண்டறிதல்.
  • தொழிற்சாலை கழிவுகளை பாதுகாப்பாக வெளியேற்றுதல்.
  • புதுபிக்ககூடிய ஆற்றலை உபயோகித்தல்.