PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
உலக வெப்பமயமாதல் காரணங்கள்:
 
பசுமை இல்ல வாயுக்கள் இயற்கையாகவே உற்பத்தியாக கூடியவை. ஆனால் மனதனின் செயல்பாடுகள் இந்த வாயுக்களின் உற்பத்தி மிகவும் அதிகரித்து உள்ளது. பசுமை இல்ல வாயுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் செயல்கள்:
  • காடுகளை அழித்தல்
  • பெட்ரோலியம் போன்ற எரிபொருட்களை எரித்தல்
  • விவசாயம் சார்ந்த நிகழ்வுகள்
  • இறந்த உயிரினங்கள் மக்குதல்
  • அனல்மின் நிலையங்கள்
  • வாகனங்களினால் ஏற்படும் காற்று மாசுபாடு
  • எரிமலை வெடித்தல்
  • தொழில்மயமாக்குதல்
காடுகளை அழித்தல்:
மரங்கள் கார்பன் டை ஆக்ஸைடினை உள்ளிழுத்துக் கொள்வதால் வளிமண்டலத்தின் தட்ப வெப்பநிலை சீராக உள்ளது. நாம் மரங்களை வெட்டும்போது அதன் உள்ளிழுத்துக்கொள்ளும் தன்மை முடிவடைகிறது மற்றும் மரங்களில் சேர்ந்துள்ள கார்பன் வெளியாகிறது.
 
பெட்ரோலியம் போன்ற பொருட்களை எரித்தல்:
பெட்ரோலியம் போன்ற கார்பன் எரிபொருட்களை எரிப்பதால் கார்பன்டை ஆக்ஸைடு வெளியாகிறது.
 
விவசாயம் சார்ந்த நிகழ்வுகள்:
மாடு ஆடு போன்றவை செரிமானத்தின் போது பெரும்பாலான மீத்தேன் வாயுவினை வெளிவிடுகின்றன. உரங்களில் நைட்ரஜன் கலந்த இருப்பதால் அது நைட்ரஸ் ஆக்ஸைடின் உருவாக்குகிறது.
 
இறந்த உயிரினங்கள் மக்குதல்:
 
ஒரு உயிரினம் இறந்த பின் அதனை மக்க வைக்கும் செயல்முறையின் போது அதிலிருந்து கார்பன் வெளிப்படுகிறது. இந்த கார்பன் காற்று, நீர் ,நிலம் என கலந்து கார்பனை டை ஆக்ஸைடினை உருவாக்குகிறது.
 
அனல்மின் நிலையங்கள்:
  
அனல்மின் நிலையங்களில் கரிம எரிபொருட்கள் எரிக்கப்படுவதால் இதிலிருந்து அதிக அளவில் கார்பன் டை ஆக்ஸைடு வெளியாகிறது.
 
வாகனங்களினால் எற்படும் மாசுபாடு:
  
வாகனங்களும் கரிம எரிபொருட்களை பயன்படுத்துவதால் அதிக அளவில் கார்பன் டை ஆக்ஸைடினை உருவாக்குகின்றன.
 
எரிமலை வெடித்தல்:
  
எரிமலை வெடிப்பின் போது அதிலிருந்து வாயுக்கள், சாம்பல் மற்றும் நுண்தூசிகள் வெளிப்படும். இந்த வாயுக்களில் உள்ள சல்பர் டை ஆக்ஸைடு உலக வெப்பம் குறைதலிலும் கார்பன் டை ஆக்ஸைடு உலக வெப்பமயமாதலிலும் பங்காற்றுகின்றன
 
தொழில்மயமாக்குதல்:
 
வேகமான மக்கள் தொகை பெருக்கத்தால் தொழிற்சாலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் அதிக அளவில் எரிபொருட்கள் எரிக்கப்பட்டு உலக வெப்பமயமாதலுக்கு காரணமாகின்றன.
 
BeFunkycollage17w3259 (1).jpg
புவி வெப்பபயமாதலின் விளைவுகள்
 
உலக வெப்பமயமாதலின் விளைவுகள்:
  • பூமியின் வெப்பம் அதிகரிப்பதால் நமது சுற்றுச்சூழலின் சராசரி வெப்பநிலை அதிகரிக்கிறது
  • பனிமலைகள் வேகமாக உருகி கடல்நீர் மட்டத்தினை உயர்த்துகின்றன.
  • அடிக்கடி வெள்ளம், மண் அரிப்பு, புயல், என எதிர்பாராத பருவகால மாற்றம் ஏற்படுதல்
  • கடலின் அமிலத்தன்மை அதிகரிப்பதால் பவளப்பாறை போன்ற உயிரினங்கள் அழிந்து போகின்றன.
  • நீர் மற்றும் பூச்சிகளால் வரும் நோய்கள் அதிகமாகின்றன.
உலக வெப்பமயமாதலை தடுக்கும் முறைகள்:
  • கரிம எரிபொருட்கள் உபயோகிப்பதை குறைத்தல்.
  • மரங்களை நடுதல்.
  • மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை உருவாக்குதல்.
  • மின்சாரம் தயாரிக்க மிக குறைந்த அளவில் எரிபொருளை பயன்படுத்தும் சாதனங்களை பயன்படுத்துதல்.