PDF chapter test TRY NOW
சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்கள் மிகவும் குளிர் அல்லது மிகவும் வெப்பமாக இருப்பதால் வாழ தகுதி அற்றதாக உள்ளன. ஆனால் பூமியில் பலவிதமான உயிரினங்கள் வாழ்கின்றன. இதற்கு காரணம் பூமியில் நிலையான வெப்பநிலை நிலவுவது தான்.
நிலையான வெப்பநிலையினை பூமி எவ்வாறு தக்கவைக்கிறது?
பூமியின் வளிமண்டலம் ஒரு போர்வை போல பூமியினை சூழ்ந்து இருக்கிறது. இந்த வளிமண்டலத்தில் உள்ள சில வாயுக்கள் சூரியனில் இருந்து வரும் ஆபத்தான கதிர் வீச்சுகளைத் தடுக்கின்றன. ஆனாலும் மனிதர்களின் செயல்களால் இந்த வெப்பநிலை மெதுவாக அதிகரித்து வருகிறது.

புவி வெப்பபயமாதல்
பசுமை இல்ல விளைவு:
சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் பூமியின் நிலப்பரப்பு மற்றும் கடல் பரப்பினால் உறிஞ்சப்படுகின்றன. இதனால் அவை அகச்சிவப்பு கதிர்கள் அல்லது வெப்பத்தினை வளிமண்டலத்தினை நோக்கி பிரதிபலிக்கின்றன.
வளிமண்டலத்தில் உள்ள சில வாயுக்கள் மீண்டும் அவற்றை பூமியின் அனைத்து திசைகளுக்கும் அனுப்புகின்றன. இதனால் பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்ந்து ஒரே சமநிலையில் இருக்கும். இந்த நிகழ்வு பசுமை இல்ல விளைவு எனப்படும்.
இந்த கதிர்களை உறிஞ்சம் வாயுக்களை பசுமை இல்ல வாயுக்கள் என்கிறோம்.
பசுமை இல்ல விளைவினால் பூமியின் வெப்பநிலை -20°C முதல் 40°C வரை சமநிலையில் உள்ளது.

புவி வெப்பபயமாதல்
பசுமை இல்ல வாயுக்கள்:
கார்பன் டை ஆக்ஸைடு \((CO_2)\) , நைட்ரஸ் ஆக்ஸைடு \((N_2O)\), மீத்தேன் \((CH_4)\), குளோரோ புளுரோ கார்பன் (CFC) , ஓசோன் \((O_3)\), etc,.
வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்களின் அளவு அதிகரிப்பதால் பூமியி்ன் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இது பசுமை இல்ல விளைவினை அதிகரிக்கிறது. காற்றில் உள்ள மாசுக்களின் அளவு அதிகமாவதால் இந்த நிகழ்வு நடக்கிறது. இந்த வெப்பநிலை அதிகரிப்பு உலக வெப்பமயமாதல் எனப்படும்.

உலக வெப்பபயமாதல்
