PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
வேதிவினை:
  
சாதாரண சூழ்நிலையில் நைட்ரஜன் வினைபுரிவது இல்லை. உயர்ந்த அழுத்தம் அல்லது உயர் வெப்பநிலை அல்லது வினையூக்கியின் முன்னிலையில் பிற தனிமங்களுடன் வினைபுரியும்.
 
எரிதல்:
  
நைட்ரஜன் தானாக எரியும் தன்மை அற்றது. ஆக்ஸிஜன் போல இது எரிதலுக்கு துணைபுரிவது இல்லை. மாறாக நைட்ரஜன் எரிதலை கட்டுப்படுத்துகிறது.
 
உலோகங்களுடன் வினை:
  
லித்தியம், கால்சியம், மெக்னீசியம் பொன்ற உலோகங்களுடன் உயர் வெப்பநிலையில் வினைபுரிந்த உலோக நைட்ரைட்டுகளைத் தருகிறது.
 உலோகம் + நைட்ரஜன்  Δ உலோக நைட்ரைடு
  
உதாரணம்:
 
3Ca + \(N_2\) Δ \(Ca_3N_2\)
6Li + \(N_2\) Δ 2\(Li_3N\)
 
அலோகங்களுடன் வினை:
 
ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் போன்ற அலோகங்களுடன் நைட்ரஜன் உயர் வெப்பநிலையில் வினைபுரிந்த நைட்ரஜன் சேர்மங்களைத் தருகிறது.
 
 அலோகங்கள்  + நைட்ரஜன்  Δ நைட்ரஜன் சேர்மங்கள்
 
உதாரணம்: 
  
 3\(H_2\) (ஹைட்ரஜன்) + \(N_2\) (நைட்ரஜன்)  Δ \(2NH_3\) (அம்மோனியா)