PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
காற்று, மண், மற்றும் உயிரினங்கள் என நைட்ரஜன் ஒரு சுழற்சி நிலையிலேயே இருக்கும். இது இயற்கையாக நடக்கும் ஒரு நிகழ்வு ஆகும். இந்த நிகழ்வினை செயற்கையாகவும் நம்மால் நடைபெறச் செய்ய இயலும். இந்த நைட்ரஜன் சுழற்சி தாவரங்களின் முறையான வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
 
YCIND20220615_3918_Nitrogen Cycle-01.png
நைட்ரஜன் சுழற்சி
 
காற்றில் அதிக அளிவில் இருக்கும் நைட்ரஜனை தாவரங்களால் நேரடியாக பயன்படுத்த இயலாது. அவற்றிற்கு நீரில் கரையும் சேர்ம வடிவில் நைட்ரஜன் தேவைப்படுகிறது. எனவே பாக்டீரியா, பூஞ்சை போன்றவற்றின் உதவியுடன் நைட்ரஜனை நைட்ரஜன் சேர்மங்களாக மாற்றும் பல்வேறு முறையினை  நைட்ரஜன் நிலைநிறுத்தம் என்கிறோம்.
 
YCIND202206153915nitrogen.png
நைட்ரஜன் நிலைநிறுத்தம்