PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நாம் ஓர் அமைதியான இடத்தில் அமர்ந்து உற்று கவனிக்கும் பொழுது நம் உடலின் பல்வேறு பகுதிகளில் இயக்கங்கள் நிகழ்வதை நம்மால் உணர முடியும்.
Example:
சுவாசித்தல் மற்றும் கண் சிமிட்டுதல் போன்றவை நம் உடலில் நடக்கும் மிக முக்கிய செயல்பாடுகள் ஆகும்.
YCIND20220901_4399_Movements in animals_08.jpg
மனிதன் சுவாசிக்கும் நிகழ்வு
 
அதனைப் போன்று விலங்குகளும் ஒரு இடத்திலிருந்து மற்ற இடங்களுக்குப் பல வழிகளில் செல்கின்றன.
Example:
  • பசுவானது நடந்து செல்வதற்குக் கால்களைப் பயன்படுத்துகின்றன.
  • பறவைப் பறந்து செல்வதற்கு இறகுகளைப் பயன்படுத்துகின்றன.
  • பாம்பு தனது முழு உடலையும் பயன்படுத்தி ஊர்ந்து அல்லது சறுக்கி செல்கின்றன.
  • மனிதர்களாகிய நாம் நடந்து செல்வதற்கு கால்களைப் பயன்படுத்துகிறோம்.
YCIND20220901_4399_Movements in animals_04.jpg
பசு நடந்து செல்லுதல்
 
மேலே குறிப்பிட்டபடி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடங்களுக்குச் செல்ல விலங்குகள் நடத்தல், நீந்துதல், பறத்தல், ஊர்ந்து செல்லுதல் போன்ற பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி செல்கின்றன.
 
விலங்குகளில் காணப்படும் இயக்கம் மற்றும் இடம் பெயர்தல் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ளவும், அறிந்து கொள்ளவும் இந்த பாடம் நமக்கு உதவுகிறது.
 
கற்றல் நோக்கங்கள்:
 
இந்த பாடத்தின் முடிவில் நீங்கள் கற்றுக்கொள்ளவிருப்பது,
  • இயக்கம்
  • இடம் பெயர்தல்
  • மண்புழுவின் இயக்கம்
  • கரப்பான் பூச்சியின் இயக்கம்
  • பறவைகளின் இயக்கம்
  • மீன்களின் இயக்கம்
  • மனித உடலின் இயக்கங்கள்
  • இயக்கங்களின் வகைகள்
  • மூட்டுகள் மற்றும் அதன் வகைகள்