PDF chapter test TRY NOW

இரு எலும்புகளுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்துவது குருத்தெலும்பு ஆகும். அதில் உள்ள திரவம் நிரம்பிய குழி போன்ற மூட்டுகளே சினோவியல் மூட்டுகள் ஆகும். இவை "டைஆர்த்ரோசிஸ்" மூட்டு என்று அழைக்கப்படும் மிகவும் நெகிழ்வான எலும்புகளை இணைக்கும் மூட்டு ஆகும். ஏனென்றால், நேரடியாக எலும்புகளை இணைக்க முடியாது. இவை எளிதில் நகரும் தன்மை கொண்டவை. இதில் \(4\) முக்கிய அம்சங்கள் உள்ளன. அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
 
தசைநார்:
 
அமைப்பு:
 
தசைநார் இணைப்பு திசுக்களின் கடினமான குறுகிய பட்டைகளென்று ஏற்கெனவே படித்தோம். இவை வலுவான நார் திசு அமைப்பைக் கொண்டுள்ளது.
 
செயல்பாடு:
 
இவை ஒரு எலும்புடன் இன்னொரு எலும்பை இணைக்கும் பணியைச் செய்கின்றது.
 
YCIND030620223831OrganisationoftissuesTM9th6.png
தசைநார்
 
சினோவியல் திரவம்:
  
அமைப்பு:
 
இவை மூட்டுக் குழியினில் இருக்கும் முட்டையின் வெள்ளைக் கரு போன்ற வழவழப்பான ஓர் திரவமாகும்.
 
செயல்பாடு:
 
சினோவியல் திரவம் மூட்டுகளிலுள்ள குருத்தெலும்புகளுக்கு இடையேயுள்ள உராய்வினை குறைக்க உதவுகின்றது.
 
shutterstock_218042575.jpg
சினோவியல் திரவம்
 
குருத்தெலும்பு மூட்டு:
  
அமைப்பு:
 
இவை மூட்டு எலும்பின் முனைகளைச் சுற்றிக் காணப்படும் கண்ணாடி போன்ற ஓர் மென்மையான குருத்தெலும்பாகும்.
 
செயல்பாடு:
 
மூட்டு எலும்பில் ஏற்படும் அதிர்ச்சியைக் குறைக்க உதவுகின்றன. மேலும் இவை எலும்புகளுக்கிடையே ஏற்படும் உராய்வினை தடுக்கவும் உதவுகின்றன.
 
YCIND20220901_4399_Movements in animals_01.jpg
குருத்தெலும்பு மூட்டு
 
மூட்டு காப்சூல்:
 
அமைப்பு:
 
இது சினோவியல் சவ்வுக்கு வெளியே இருக்கும். அதாவது இவை, நார் காப்சூல் படலம் கொண்ட இரு அடுக்குகளாலான கடினமான நார் திசுவாகும்.
 
செயல்பாடு:
 
நார் தன்மை உடைய காப்சூல் மூட்டுகளை வலுப்படுத்துவதோடு இவை சினோவியல் மூட்டுகளை வரிசைப்படுத்தும் பணிகளையும் மேற்கொள்கிறது. மேலும், சினோவியல் திரவத்தையும் சுரக்கின்றது.
 
 
Important!
குருத்தெலும்பில் ஏற்படும் உராய்வின் மூலம் அல்லது சினோவியல் திரவம் இல்லாத நிலையின் போது ஏற்படும் நிலையே மூட்டுகளின் அழற்சி என அழைக்கப் படுகிறது. இந்நோயால் அவதிப்படுபவர்கள் ஒவ்வொரு முறையும் மூட்டுகளை நகர்த்தும் போதெல்லாம் கடுமையான வலியை உணர்வார்கள். இவை கீழ்வாதம் அல்லது மூட்டு வீக்கம் அதாவது ஆர்த்ரைடிஸ் என்று அழைக்கப்படுகிறது. யூரிக் அமிலப் படிகங்கள்  மூட்டுகளில் படிவதால் மூட்டு வீக்கம் ஏற்படுகின்றது.