PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
முந்தைய கோட்பாட்டில் மனித உடலின் இயக்கங்கள், இயக்கங்களின் வகைகள் குறித்துப் படித்தோம். எலும்பு தசை மண்டலம் மற்றும் அதில் நடைபெறும் இயக்கங்களைக் குறித்து நாம் தெளிவாக அறிந்துக்கொள்ள வேண்டுமென்றால் மூட்டுகள், எலும்புகள் மற்றும் தசைகளின் வகைகள் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம்.
 
மூட்டுகள்:
இரண்டு எலும்புகள் சந்திக்கும் அல்லது இணையும் இடம் மூட்டு எனப்படும்.
அசையும் தன்மை பொறுத்து மூட்டுகள் மூன்று முக்கிய வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன,
  1. நிலையானவை
  2. சற்று நகரக்கூடியவை
  3. நகரக்கூடியவை
நிலையான அல்லது அசையா மூட்டுகள்:
 
shutterstock_1020357439.jpg
மண்டையோடு
 
அசையா மூட்டு வகையில், அதன் பெயரில் இருக்கும் பொருள் போலவே இரண்டு தனித்தனி எலும்புகளுக்கிடையே எந்த ஒரு இயக்கமும் அதாவது அசைவு இருக்காது.
Example:
மண்டையோட்டின் எலும்புகளுக்கு இடையிலான கட்டமைப்புகள்
சற்று நகரக்கூடிய மூட்டுகள்:
 
shutterstock_365003318.jpg
விலா எலும்புக்கும் மார்பு எலும்புக்கும் இடையில் உள்ள மூட்டு
 
சற்று நகரக்கூடிய மூட்டு வகையில், இரண்டு தனித்தனி எலும்புகளுக்கிடையில் மிகக் குறைந்த இயக்கமே இருக்கும்.
Example:
விலா எலும்புக்கும் மார்பு எலும்புக்கும் இடையில் உள்ள மூட்டு, முதுகெலும்பிற்கு இடையில் உள்ள மூட்டு.
தசை நார்கள்:
 
இவை இணைப்பு திசுக்களின் கடினமான குறுகிய பட்டைகளாகும். இவை ஒரு எலும்புடன் இன்னொரு எலும்பை இணைத்து மூட்டுகளை உருவாக்கும். தசை நார்கள் அல்லது லிகமண்ட் அதிகமாக நெகிழ்வு அல்லது வளையும் தன்மை கொண்டதோடு அதிக வலிமையுடையவையாகவும் இருக்கும்.
 
மிகக் குறைந்த மேட்ரிக்ஸைப் பெற்றுள்ளன. இவை, மூட்டுகளுக்கு வலிமையைத் தருவதோடு சாதாரண நகர்வுகளுக்கும் உதவுகின்றன. தசை நார்கள் அதிகப்படியாக இழுக்கப்படுவதால் தான் சுளுக்கு ஏற்படுகிறது.
 
YCIND030620223831OrganisationoftissuesTM9th6.png
தசை நார்கள் அல்லது லிகமண்ட்
 
தசை நாண்கள்:
 
இவை மீள் திசுக்களாலானவை. இவை எலும்புச் சட்டக தசைகளை எலும்புகளுடன் இணைக்கிறது. தசை நாண்கள் அல்லது டென்டான்கள் கயிறு போன்ற உறுதி மற்றும் கட்டுகளுக்கு இணையான கொலாஜன் நார்களைக் கொண்டு காணப்படுகின்றது. இவற்றிற்கு  இடையில் ஃபைப்ரோபிளாஸ்ட்களும் உள்ளன.
மேலும், தசை நாண்கள் அதிக வலிமை மற்றும் குறைந்த நெகிழ்வுத் தன்மை உடையவை அதாவது வளையும் தன்மை குறைவானதாகவே இருக்கும்.  இவ்வாறு இவை மூட்டின் செயல்பாட்டில் மிக முக்கிய பங்கினை வகிக்கின்றது.
 
YCIND310520223819Organisationoftissues3.png
தசை நாண்கள் அல்லது டென்டான்கள்