PDF chapter test TRY NOW

உயர்நிலை முதுகெலும்பு உயிரினங்களில் மூன்று வகை தசைகள் உள்ளன.
  1. வரித்தசை அல்லது எலும்புத்தசை அல்லது தன்னிச்சை தசைகள்
  2. வரியற்ற அல்லது மென்மையான அல்லது தன்னிச்சையற்ற தசை
  3. இதயத் தசைகள்
YCIND20220816_4262_Human organ systems_9.png
தசைகளின் வகைகள்
 
வரித்தசை  அல்லது  எலும்புத்தசை:
 
அமைவிடம்:
 
இது எலும்புகளுடன் இணைக்கப்பட்டு இருக்கும்.
 
பண்புகள்:
 
இதில் பல உட்கருக்கள் உள்ளன.
 
தன்னிச்சையான தசை:
 
அமைவிடம்:
 
இது கால்கள், கைகள், கழுத்து போன்ற இடங்களில் காணப்படும் தசையாகும்.
 
பண்புகள்:
 
தன்னிச்சையானது மற்றும் கிளைகள் அற்றது.

வரியற்ற தசை அல்லது மென்மையான தசை அல்லது தன்னிச்சையற்ற தசை:
 
அமைவிடம்:
 
கண்ணின் கருவிழி, மூச்சுக் குழாய், இரத்த நாளங்கள் மற்றும் தோல் போன்ற உடலின் மென்பாகங்களுடன் இணைக்கப்பட்டது. 
 
பண்புகள்:
 
இவை ஒற்றை மையக்கரு மற்றும் தன்னிச்சையற்றது.
 
இதயத்தசை:
 
அமைவிடம்:
 
இவை இதயத்தில் உள்ள தசையாகும்.
 
பண்புகள்:
 
இவை கிளைகள் உடைய தசை அமைப்பைப் பெற்றிருக்கும். \(1\) முதல் \(3\) மைய உட்கருவைக் கொண்டது மற்றும் தன்னிச்சையற்றது.
தசைகளின் ஒருங்கிணைப்பு:
  • நிற்பது, நடப்பது, ஓடுவது, விளையாடுவது என அனைத்து செயல்பாடுகளுக்கும் தசைகளின் ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம் ஆகும்.
  • தசைகள் ஒன்றிணைந்து செயல் பட்டால் தான் நம் உடலில் வெவ்வேறு வகையான இயக்கம் நடைபெற இயலும்.
  • உடல் உறுப்புகளின் இயக்கம் தசைகள் சுருங்கி, விரிவடைதல் மூலமே நடைபெறுகின்றது.
  • தசைகளால் எலும்பினை இழுக்க முடியும். ஆனால், அதன் முந்தைய நிலைக்குத் தள்ள முடியாது, அதனால் இவை நெகிழ்வு மற்றும் நீட்சித் தசைகளாகச் செயல்படுகின்றன.
  • நெகிழ்வு தசை சுருக்கம் அடைவதால், மூட்டுகளில் கை மற்றும் கால்கள்வளையும். பின்னர் இயக்கம் முடிவடைந்ததும் நெகிழ்வு தசை தளர்ந்து, நீட்சித் தசை சுருங்குவதால் கை மற்றும் கால் நேராகும்.
Example:
மேற்கையின் முன்பகுதியில் உள்ள இருதலைத்தசை நெகிழ்வு தசை ஆகும். மேற்கையின் பின்பகுதியில் உள்ள முத்தலைத்தசை நீட்சித் தசை ஆகும்.

நாம், நமது முழங்கையை வளைக்கும் பொழுது இருதலைத்தசைசுருங்கும். பின்னர், முத்தலைத்தசை தளர்ந்து, முழங்கையை நேராக்குகின்றது.