PDF chapter test TRY NOW

எலும்பு மண்டலம் தசைகளினால் மூடப்பட்டுள்ளது. மேலும் உடலின் அனைத்து இயக்கங்களுக்கும் தசைகள் மிகவும் முக்கியம். உடலுக்குச் சரியான வடிவம், நிற்கும் மற்றும் நடக்கும் தோரணை, உட்காரும் நிலை போன்ற செயல்பாடுகளைச் செய்வதற்குத் தசைகள் உதவி செய்கின்றன. பொதுவாகத் தசைகள் நீண்ட, சுருங்கும் தன்மையுடைய திசுக்களின் கற்றைகளே ஆகும்.
தசைகள் இயக்கத்திற்கு ஏற்ப விரிந்து சுருங்கும் தன்மையுடைய இரு முனை திசு கற்றை ஆகும். அதில் ஒரு முனை, தசைகள் தோன்றும் நிலைத்த முனை; மற்றொரு முனை பிற பகுதிகளை இழுக்கும் தன்மையுள்ள நகரும் முனை ஆகும்.
நகரும் முனை நீண்டு எலும்புடன் இணைக்கப்பட்டு இருக்கும். அது தசைநார் எனப்படும் கடினமான ஒரு அமைப்பை உருவாக்குகின்றது. மேலும் நரம்பினால் ஏற்படும் தூண்டுதல் தசையைத் தடிமன் ஆக்கும். அப்போது நகரக்கூடிய முனையில் உள்ள எலும்பினை இழுக்கின்றது. தசைகளால் சுருங்க மற்றும் தளர்வடைய முடியும், ஆனால் நீள முடியாது.
  • முடியின் வேரில் உள்ள தசைகள் உடல் சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன.
  • மனிதன் புன்னகை செய்ய \(17\) தசைகள் இயங்க வேண்டும்.
  • மனிதன் கோபப்பட \(42\) தசைகள் தேவைப்படுகின்றது.
  • அதிகமாக வேலை செய்யும் தசைகள் கண்களில் உள்ளன.
YCIND20220816_4262_Human organ systems_10.jpg
மனிதனின் எலும்புடன் இணைந்த தசைநாண் மற்றும் தசை
தசைகள் பொதுவாக ஜோடியாக அதாவது ஒன்றுக்கொன்று எதிராகச் செயல்படுகின்றன. அவை எதிரெதிர் ஜோடிகள் எனவும் அழைக்கப்படும்.
 
இருதலைத்தலை மற்றும் முத்தலைத்தசை இவை இரண்டும் மேல் கையில் உள்ளவை ஆகும். கைகள் வளைதல் மீண்டும் நேராகுதல் போன்ற இயக்கம் இவற்றால் நடக்கின்றது. இந்த இரு தசைகளும் ஒன்றுக்கு ஒன்று எதிராகச் செயல்படுகின்றன.
இருதலைத்தசை சுருங்கும்போது கையின் கீழ்ப்பகுதி உயர்ந்து கை வளையும். அப்போது முத்தலைத்தசை தளரும். மறுபடி கை நேராவதற்கு இந்த செயல்பாடு தலைகீழாக நடைபெறும். அதாவது முத்தலைத்தசை சுருங்கி கையை நேராக்குகின்றது. இது போன்ற எதிரெதிர் தசைகள் உடல் முழுதும் உள்ளன.
 
shutterstock67720486.jpgshutterstock788969332.jpg
மனிதனின் எதிரெதிர் இணை தசைகள் (இருதலைத்தசை மற்றும் முத்தலைத்தசை)
கண்ணின் கருவிழியில் இரண்டு ஜோடி தசைகள் உள்ளன. கண் பாவையிலிருந்து மிதிவண்டி ஆரம் அல்லது ஸ்போக் போல வெளியேறும் ரேடியல் மற்றும் வட்ட தசைகள் உள்ளன. இதில் ரேடியல் தசை கண் பாவையை அகலமாக்க உதவும். வட்ட தசைகள் கண்ணின் பாவையைச் சிறிதாக்க உதவுகின்றன.
 
YCIND20220810_4271_Human organ systems_01.jpg
மனிதக் கண் நீள்வெட்டுத் தோற்றம்