PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கை எலும்பு:
 
கை எலும்பு கீழ்க்காணும் \(6\) எலும்புகளைக் கொண்டுள்ளது.
  1. மேற்கை எலும்பு அல்லது ஹீமரஸ்
  2. ஆர எலும்பு
  3. அல்னா அல்லது முழங்கை எலும்பு
  4. கார்பல்கள் அல்லது மணிக்கட்டு எலும்பு
  5. மெட்டாகார்பல்கள் அல்லது உள்ளங்கை எலும்பு
  6. ஃ பலாஞ்சஸ் அல்லது விரல் எலும்பு
YCIND20220816_4262_Human organ systems_5.png
கை எலும்பு
  • மேலே குறிப்பிட்டுள்ள எலும்புகள் அனைத்தும் கீழ் மூட்டுகளால் இணைக்கப்பட்டு உள்ளன.
  • இந்த எலும்புகள் அனைத்தும் ஒரு திசையில் மட்டுமே செயல்படக் கூடியவை.
  • ஹீமரஸ், மேல் கையை உருவாக்குகின்றது.
  • ஆரம் மற்றும் அல்னா இரண்டும் இணைந்து முன் கையை உருவாக்குகின்றது.
  • கார்பல்கள் மணிக்கட்டு பகுதியை உருவாக்குகின்றது.
  • மெட்டா கார்பல்கள் உள்ளங்கை பகுதியைக் கட்டமைக்கின்றன.
  • ஃ பலாஞ்சஸ் விரல்களை உருவாக்குகின்றது.
கால் எலும்பு:
 
கை எலும்பு கீழ்க்காணும் \(6\) எலும்புகளைக் கொண்டுள்ளது.
  1. தொடை எலும்பு   
  2. டிபியா அல்லது கால் முள்ளெலும்பு
  3. ஃபிபுலா அல்லது கால் எலும்பு
  4. டார்சல்கள் அல்லது கணுக்கால் எலும்பு
  5. மெட்டா டார்சல்கள் அல்லது முன்பாத எலும்பு
  6. ஃ பலாஞ்சஸ் அல்லது விரல் எலும்பு
YCIND20220816_4262_Human organ systems_6.png
கால் எலும்பு
  • மேலே குறிப்பிட்ட எலும்புகள் அனைத்தும் கீழ் மூட்டினால் இணைக்கப்பட்டிருக்கும்.
  • இவை ஒரு திசை செயல்பாடு கொண்ட எலும்புகள் ஆகும்.
  • கால் எலும்பு முழங்கால் பட்டெல்லா அல்லது முழங்கால் தொப்பி என்னும் அமைப்பால் மூடி இருக்கும்.
  • தொடை எலும்பு பீமர் எலும்பு கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
  • டிபியா மற்றும் ஃபிபுலா இரண்டும் சேர்ந்து கால்களை உருவாக்குகின்றது.
  • டார்சல்கள் கணுக்கால்களையும், மெட்டா டார்சல்கள் கால்களையும் கட்டமைக்கின்றன.
  • ஃபலாஞ்சஸ் கால் விரல்களை உருவாக்குகின்றன.