PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoபெண்கள் மாதவிடாய் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய சுகாதார செயல்கள் பின்வருமாறு காணலாம்.
மாதவிடாய் சுகாதாரம்
- மாதவிடாய் சமயங்களில் பெண்கள் தங்களின் உடல் சுத்தத்தை நன்கு பேணிக் காக்க வேண்டியது மிக முக்கியம்.
- மாதவிடாய் சமயத்தில் இரத்தப்போக்கினை கட்டுப்படுத்த துணிகளுக்குப் பதிலாக ஒருமுறை மட்டுமே உபயோகப்படுத்தக் கூடிய நாப்கின் அல்லது டாம்பூன் பயன்படுத்தலாம். அதனால் நோய் தொற்று ஏற்படுவது குறையும்.
- மாதவிடாயின் அளவைப் பொறுத்து நாப்கின் அடிக்கடி மாற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
- அவ்வாறு இன்றி துணியை பயன்படுத்த எண்ணினால் சோப் கொண்டு நன்கு துவைத்து வெந்நீரில் அலசி வெயிலில் காய வைத்து பயன்படுத்த வேண்டும்.
Important!
வளரிளம் பருவத்தில் மிகவும் அவசியம் தூக்கம். பதின்ம வயதின் மன அழுத்தத்தை போக்க தூக்கம் மிகவும் உதவும். இருபாலருக்கும் பதின்ம வயதில் தினமும் \(8 - 10\) மணிநேர தூக்கம் மிகவும் அவசியம் ஆகும். ஆனால் பெரும்பாலானவர்கள் போதுமான தூக்கம் கொள்வதில்லை.
உடற்பயிற்சி
- சுத்தமான காற்று உள்ள பகுதியில் நடைப்பயிற்சி செய்வது, விளையாடுவது போன்றவை உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
- இளம் வயதில் இருபாலரும் உடற்பயிற்சி நடைப்பயிற்சி மற்றும் வெளியரங்க விளையாட்டுகள் மேற்கொள்ள வேண்டும்.
- இவ்வாறு செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியம், மன அமைதி மற்றும் நல்ல தூக்கம் கிடைக்கும்.
- மேலும் மன அமைதி மகிழ்ச்சியை தோற்றுவிக்கின்றது.