
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஇருபாலரிலும் பொதுவாக ஒரு நபரின் ஆரோக்கியமானது உடல்நலம் மற்றும் மனநலம் இரண்டையும் கொண்டு கணக்கிடப்படுகிறது.
இனப்பெருக்க ஆரோக்கியம் என்பது யாதெனின் வளரிளம் பருவத்தின் நடத்தை, உணர்ச்சி, உடல் மற்றும் சமூக அம்சங்களின் மொத்தக் கூறு என உலக சுகாதார நிறுவனம் (WHO) கூறுகின்றது.
எந்த வயதை சேர்ந்தவராக இருந்தாலும் உடல் ஆரோக்கியம் பேண உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் சுயசுகாதாரம் ஆகியவற்றை பேணுதல் மிகவும் அவசியம் ஆகும். அவ்வாறு சரியாக தான் ஆரோக்கியத்தை பேணவில்லை எனில் அது தனி மனிதரில் மட்டும் இன்றி அவரை சுற்றி இருக்கும் பலருக்கும் பல உபாதைகளை ஏற்படுத்தக்கூடும்.
இருபாலருக்கும் கடைபிடிக்க வேண்டிய பொதுவான சில பழக்க வழக்கங்கள் சில பின்வருமாறு,
தூய்மை
- ஒரு நாளைக்கு இருமுறை குளிக்க வேண்டும்.
- இடுப்பு, அடிவயிறு மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளுக்கு தனியேக் கவனம் செலுத்தி நன்கு தேய்த்துக் குளிக்க வேண்டும்.
- உள்ளாடைகளைத் தினமும் மாற்றுதல் மிகவும் அவசியம் ஆகும். உள்ளாடைகள் பருத்தி துணியால் ஆனவையாக இருத்தல் நலம். மேலும், அவற்றை நன்கு துவைத்து வெயிலில் உலர்த்தி பயன்படுத்த வேண்டும்.
- பதின்ம வயதில் வியர்வை சுரப்பிகள் செயல்பாடு உடலில் அதிகமாக இருக்கும். அதிக வியர்வை காரணமாக சில நேரம் உடலில் துர்நாற்றம் ஏற்படும்.
- அவர்கள் சுயசுத்தம் சரியாக கடைபிடிக்கா விட்டால் பூஞ்சை, பாக்டீரியா போல பல நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், அந்த தொற்று நோய்கள் அவர்களைச் சார்ந்தவர்களையும் பாதிக்க வாய்ப்பு உள்ளது.