PDF chapter test TRY NOW

பெண்களின் வாழ்வில் மாதவிடாய் சுழற்சி பருவமடைதலில் துவங்குகின்றது. மாதவிடாயின் ஆரம்ப காலகட்டதில் கருப்பையில் உள்ள எண்டோமெட்ரியல் சுவர் உரிய துவங்கும். அதன் பின் ரத்தப்போக்கு ஏற்படும்.
எண்டோமெட்ரியல் சுவர் உரிதல்  என்பது குறிப்பிட்ட கால இடைவெளியில் கருப்பை கர்ப்பத்திற்கு தயாராவதைக் குறிக்கின்றது.
பெண்ணின் உடலில் உள்ள அண்டகத்தில் இருந்து கருமுட்டை (அண்டம்) விடுவிக்கப்பட்டு விந்தணுக்களால் கருத்தரிப்பு நடக்காவிட்டால் மாதவிடாய் ஏற்படுகின்றது.
 
YCIND20220821_4315_Reaching the age of adolescence_01.png
மாதவிடாய் சுழற்சி
  1. பெண்ணின் பருவ வயது \(10 - 20\) வயது ஆகும். அந்த சமயத்தில் ரத்தத்தில் வெளியாகும் பாலியல் ஹார்மோன்கள் அண்டகத்தில் உள்ள கருமுட்டையை முதிர்வடைய வைக்கின்றது.
  2. முதிர்வு அடைந்த ஒரு அண்டம் அண்டகத்தில் இருந்து (கருமுட்டை) \(28\) நாட்களுக்கு ஒரு முறை அண்டநாளத்தை வந்து அடையும். இதுவே அண்டம் விடுபடுதல் எனப்படும்.
  3. அண்டம் விடுபடுதல் ஏற்படுவதற்கு முன்னர் பெண்ணின் உடலில் உள்ள கருப்பையின் உள் சுவர் தடித்து மிகவும் மென்மையாக காணப்படும். கருவுற்ற அண்டத்தை ஏற்க தயாராக இருக்கும் நிலை இதுவாகும்.
  4. இந்த சூழலில் அண்டம் கருவுறவில்லை என்னும்போது மென்மையான கருப்பை சுவர் தேவைப்படாது. அப்போது அது சிதைவடைய துவங்கும். 
  5. பின்னர் அந்த கருப்பைச் சுவர் இரத்தக் குழாயுடன் சேர்ந்து கருவுறாத சிதைத்த அண்டத்துடன் வெளியேறும். இனப்பெருக்க குழாய் மூலம் இரத்தபோக்காக இது வெளியேற்றப்படும். இதுவே மாதவிடாய் என்று அழைக்கப்படுகின்றது.
  6. அண்டம் விடுபடுதல் ஏற்பட்டு \(14\)-வது நாள் மாதவிடாய் தோன்றும். இது \(3 - 4\) நாட்கள் வரை நடக்கும்.
  7. இந்த சுழற்சி முடிவுக்கு வரும்போது கருப்பையின் உட்புறம் அடுத்த சுழற்சிக்கு தன்னை தயார் படுத்திக்கொள்ளும்.
  8. இதில் அண்டம் கருவுறவில்லை என்றால், மாதவிடாய் சுழற்சி மீண்டும் ஏற்படும். \(28\) நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஏற்படுகின்றது. முக்கியமாக இது பெண்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படுகின்றது.
  9. ஒருவேளை கருவுறுதல் ஏற்பட்டால் பெண் கர்ப்பம் தரிப்பாள். அப்போது மாதவிடாய் தற்காலிகமாக நின்றுவிடுகின்றது. கருவுற்ற பின்னர் கருமுட்டை குழந்தையாக வளர்ச்சியுற கருப்பையின் உள்ளே அந்த தடித்த மென்மையான சுவருடன் ஒட்டிக்கொள்ளும்.
  10. மென்மையான கருப்பை சுவரும், இரத்த நாளங்களும் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவைபடுவதால் மாதவிடாய் ஏற்படாது. பிரசவத்தில் குழந்தை பிறந்தவுடன் பெண்ணின் உடலில் மாதவிடாய் மீண்டும் தோன்றுகின்றது.
  11. உடல் எடை குறைவு, மன அழுத்தம், தவறான உணவு பழக்கம், ஊட்டச்சத்து குறைபாடு, அதிக எடை போன்றவை மாதவிடாய் நிற்க பிற காரணங்கள் ஆகும்.
shutterstock_1198319950 (1).jpg
அண்டம்