PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
உராய்வின் நன்மைகள்:
 
நமது அன்றாட செயல்பாடுகளில் உராய்வானது மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. உராய்வு நமது அன்றாட வாழ்வின் பெரும்பாலான நிகழ்வுகளில் விரும்பத்தக்கதாக உள்ளது.
  • எந்தவொரு பொருளையும் உராய்வின் காரணமாகவே நம்மால் பிடிக்க முடிகிறது.
  • நம்மால் சாலைகளில் உராய்வின் காரணமாகவே நடக்க முடிகிறது. நாம் கீழே விழாமல் நடக்க காலணி மற்றும் தரைக்கு இடையிலான உராய்வு விசை உதவுகின்றது.
  • பேனா மூலம் நாம் காகிதத்தில் உராய்வின் காரணமாகவே எழுத முடிகிறது.
  • சக்கரத்திற்கும் சாலைக்கும் இடையேயான உராய்வு விசை காரணமாகவே வாகனங்கள் பாதுகாப்புடன் நகர்கின்றன. இயங்கும் வாகனத்தை நிறுத்த தடையைச் செலுத்தும் போது உராய்வின் காரணமாகவே வாகனம் ஓய்வு நிலைக்கு வருகிறது.
  • தீக்குச்சியை உரசிப் பற்றவைப்பது, துணியைத் தைப்பது, முடிச்சுக்களைப் போடுவது, சுவற்றில் ஆணியை அடிப்பது என அனைத்திற்கும் உராய்வே காரணமாக உள்ளது.
உராய்வின் உதவியால் அன்றாட வாழ்வில் பெரும்பாலான வேலைகளை எளிதாக செய்ய முடிந்தாலும், இதனால் சில தீய விளைவுகளும் ஏற்படுகின்றன. எனவே, உராய்வைத் தேவையான தீமை என்றழைக்கின்றனர்.
  
உராய்வின் தீமைகள்:
  • இயந்திரங்களின் பற்சட்ட அமைப்பு, திருகுகள் மற்றும் காலணிகளின் அடிப்பாகம் போன்றவை பிறபொருள்களின்மீது உரசி தேய்க்கப்படுவதால் அவை தேய்மானம் அடைகின்றன.
  • உராய்வைத் தவிர்ப்பதற்காக கூடுதல் திறன் கொண்ட இயந்திரங்களை இயக்குவதால் அதிகமான ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது.
  • உராய்வு வெப்பத்தை உருவாக்குவதால் கருவிகள் உடைந்து பழுது ஏற்படுகிறது.