PDF chapter test TRY NOW

உராய்வை அதிகரித்தல் மற்றும் குறைத்தல்:
 
. தொடுபரப்பு:
 
உராய்வை, தொடுபரப்பை அதிகரிப்பதன் மூலம் அதிகரிக்கலாம்.
Example:
மிதிவண்டியில் சக்கரத்தின் உள்விளிம்பிற்கு மிகவும் அருகில் தடைக் கட்டைகளை அமைப்பதன் மூலம், தடை செயல்படுத்தப்படும்போது உராய்வு அதிகரித்து மிதிவண்டி உடனே ஓய்வு நிலையை அடையும்.
. உயவுப் பொருள்களைப் பயன்படுத்துல்:
உயவுப் பொருள் என்பது உராய்வைக் குறைக்க பயன்படுத்தப்படும் பொருள் எனப்படும்.
Example:
கிரீஸ், தேங்காய் எண்ணெய், கிராஃபைட், விளக்கெண்ணெய் முதலியன.
ஒன்றையொன்று தொடர்புகொண்டுள்ள இரண்டு பொருள்களின் ஒழுங்கற்ற பரப்புகளுக்கு இடையில் உயவுப் பொருள்கள் சென்று அவற்றிற்கிடையே ஒரு வழவழப்பான உறை உருவாகிறது. இது இரு பரப்புகளுக்கு இடையேயான நேரடித் தொடர்பைத் தடுத்து உராய்வைக் குறைக்கிறது.
 
. பந்து தாங்கிகளைப் பயன்படுத்துதல்:
 
நழுவு உராய்வை விட உருளும் உராய்வு குறைவாக இருப்பதால், பந்து தாங்கிகளைக் கொண்டு நழுவு உராய்வை உருளும் உராய்வாக மாற்றலாம்.
 
இந்தக் காரணத்திற்காகவே மிதிவண்டிகளின் சக்கர அச்சில் காரீயத்தினாலான பந்துத் தாங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.